உலகம் முழுவதும் 6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதற்காக ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் 3.1 பில்லியம் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.சமீப காலங்களில் குழந்தைகளுக்கான் அச்சுறுத்தல்கள் அதிகமாக வளர்ந்து உள்ளன.மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் எபோலோ நோய் மூலமும் , சிரியாவில் தீவிரவாதம் மூலமும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த நிதி உதவி மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும்.
இது குறித்து யுனிசெப் இயக்குனர் அப்சான் கான் கூறியதாவது:-
ஆபத்தான இயற்கை பேரழிவுகள் மூலம் ஏற்படும் இழப்புகள், தொற்று நோய் பரவுதல், என உலகம் முழுவதும் புதிய தலைமுறைகள் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன. என யுனிசெப் இயக்குனர் அப்சான் கான் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டை விட 3.1 பில்லியன் நிதி உதவி என்பது மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும்.நெருக்கடிகள் அளவில் அதன் கால் அளவு மற்றும் தாக்கம் என்பது முன்பு கண்டிராததை விட அதிகம் ஆகும். மோதல்கள் அதிகரித்த துணை பிராந்தியங்களிலும் இத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளன.
சிரியாவில் 13 முதல் 18 வயது உள்ள ஆயிரகணக்கான் சிறுவர்கள் ஆயுத பயிற்சிக்காக தேர்ந்து எடுக்கபடுகிறார்கள். அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்கி விடுகின்றனர்.3.1 பில்லியன் டாலர் நிதி உதவியில் 20 சதவீதம் 71 நாடுகளில் உள்ள் 98 மில்லியன் மக்களுக்கு குறிப்பாக மூன்றில் 2 பங்கு குழந்தைகளுக்கு
கல்விக்காக செலவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.