Breaking
Mon. Dec 23rd, 2024

பொதுத் தேர்தல் தினத்­தன்று அசம்­பா­வி­தங்கள் மற்றும் கைக­லப்­புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்­கப்­படும் பிர­தான 615 வாக்குச் சாவ­டி­க­ளுக்கு பலத்த பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த வாக்குச் சாவ­டி­களில் மூன்று பொலிஸ் அதி­கா­ரிகள் வீதம் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­படுவார்கள் என்றும், தேவை­யேற்­பட்டால் மேல­திக பொலிஸ் அதி­கா­ரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பொலிஸ் தலை­மை­யகம் தெரிவித்­துள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக கல­கங்கள் அடக்கும் 165 குழுக்கள் தேர்தல் தினத்­திற்கு முன்­பும் தேர்தல் தினத்­தன்றும், அதற்கு பின்­னரும் ஆயத்­த­மான நிலையில் தயார்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related Post