Breaking
Sun. Nov 24th, 2024

நாட­ளா­விய ரீதியில் நீதி­மன்­றங்­களால் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 6 இலட்­சத்து 50 ஆயிரம் குற்­ற­வா­ளி­களின் கை விரல் ரேகை அடை­யா­ளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை குற்ற விசா­ர­ணைக்கு பயன்­ப­டுத்­த­வென நாட­ளா­விய ரீதியில் விரிவு படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் பதிவுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

கைவிரல் ரேகை ஒத்துப் பார்க்கும் சேவையை நாட­ளா­விய ரீதியில் விஸ்­த­ரிக்கும், குற்ற விசா­ர­ணையின் போது கைது நட­வ­டிக்­கை­களை இல­கு­ப­டுத்தும் வித­மா­கவும் இரு வேறு நட­வ­டிக்­கை­களின் ஆரம்ப வைப­வத்தில் கலந்­து­கொண்டே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இந்த வைப­வங்கள் பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் தலை­மையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொள்ள இடம்­பெற்­றது. அமைச்சின் செய­லாளர் ஜகத் பி.ஜய­வீர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளான காமினி நவ­ரத்ன, பூஜித்த ஜய­சுந்­தர, நந்­தன முன­சிங்க, ஜகத் அபே­சிறி குணவர்­தன உள்­ளிட்ட உயர் அதி­கா­ரிகள் பலரும் கலந்­து­கொண்­டனர். இதன் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்­த­தா­வது,

கைவிரல் ரேகையை வைத்து சந்­தேக நபர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக காணும் நடை முறை 1908 ஆம் ஆண்டு இலங்­கையில் அறி­முகம் செய்­யப்­பட்­டது. அப்­போது ஆங்­கி­லேயர் இந்­தி­யாவின் தமிழ்நாட்டில் இருந்து இங்கு அழைத்து வந்த குழந்தை வேல் முத­லியார் என்ற பொலிஸ் பரி­சோ­த­கரைக் கொண்டு இங்கு இந்த நடை முறை ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1908 முதல் 2012 ஆம் ஆண்டு வரை சாதா­ரண மனிதக் கண்­க­ளினால் சில கரு­வி­களைப் பயன்­ப­டுத்தி இது தொடர்­பி­லான சோத­னைகள் இடம்­பெற்­றன.

எனினும் 2012 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்­க­ழகத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் அனு­ச­ர­ணையில் இதற்­கென விசேட மென் பொருள் உரு­வாக்­கப்­பட்­டது. அதன்­படி 2013 பெப்­ர­வரி 28 முதல் கைவிரல் ரேகைகள் ஒத்துப் பார்க்க கணினி பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இந் நிலையில் இந்த தொழில் நுட்ப வச­தி­களை நாம் தற்­போது நாட­ளா­விய ரீ­தியில் உள்ள 42 பொலிஸ் பிரி­வுகள், குற்றப் புல­னாய்வுப் பி­ரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மோசடி தடுப்புப் பிரிவு, பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு ஆகிய விஷேட நிறு­வ­னங்­க­ளுக்கும் விஸ்­த­ரிப்பு செய்­துள்ளோம். இதுவே இந்த நிகழ்வின் பிர­தான நோக்கம்.

இத­னூ­டாக குற்­ற­வி­சா­ர­ணைகள் இல­கு­ப­டுத்­தப்­படும்.

சந்­தே­கத்தில் கைதாகும் ஒரு­வரின் கை விரல் ரேகைகள் உட­ன­டி­யாக பெறப்­பட்டு சில மணி நேரங்­க­ளி­லேயே ஒத்துப் பார்க்­கப்­படும். இது வீண் சிர­மங்­களை தடுக்க உதவும்.எம்­மிடம் தற்­போ­துள்ள தர­வு­களில் பழை­மை­யான கைவிரல் ரேகை 1912 ஆம் ஆண்டு எடுக்­கப்­பட்­ட­தாகும். அத்­துடன் அதில் மற்­றொரு கைவிரல் ரேகைக்கு உரி­யவர் 212 குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வ­ராவார்.

இதனை விட சிறை­களில் இருந்து தப்­பிய 7300 பேரின் விப­ரங்­க­ளும்­தி­றந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 ஆயிரம் பேரின் விபரங்களும் 9943 இராணுவத்தில் இருந்து தப்பியோரின் விபரங்களும் கூட எம்மிடம் உள்ளன. அதனால் இவ்வாறு விரிவுபடுத்தப்படும் திட்டம் குற்ற விசாரணைகளில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

By

Related Post