Breaking
Fri. Nov 15th, 2024

பாகிஸ்­தானில் 7 வயது சிறு­வ­னுக்கும் 6 வயது சிறு­மிக்கும் திரு­மணம் நடத்தி வைத்த குற்றச்­சாட்டில் ஆறு பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

மேற்­படி சிறார்­களின் பெற்றோர் மற்றும் திரு­மண வைப­வத்தின்  சாட்­சி­க­ளான 6 பேரும் பாகிஸ்தானின் கிழக்குப் பகு­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டனர் என சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­யான  சைஃபுல்லா கான் தெரி­வித்­துள்ளார்.

இவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டால் 6 மாத சிறைத்­தண்­டனை மற்றும் 50,000 பாகிஸ்தான் ரூபா அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாகிஸ்­தானில் திரு­மணம் செய்­து­கொள்ளும் பெண்­களின் வயதை 16 இலி­ருந்து 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும் சிறுவர் திரு­ம­ணங்­களை நடத்­து­வோ­ருக்கு கடும் தண்­டனை அளிப்­ப­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்று முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும், எதிர்ப்­பு­க­ளை­ய­டுத்து அச்சட்டமூலம் கடந்த மாதம் வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post