Breaking
Mon. Jan 13th, 2025

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரிலுள்ள 30 முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் சுமார் 600 மாணவ மாணவிகளுக்கு தரம் ஒன்றுக்கான பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைவான 300 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு  (15) நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிந்தவூரின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ஆக்கமும் வழங்கும் வகையில் நடாத்தப்பட்ட
இன்நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக கல்முனை கல்வி வலயப் பணிமனையின் உதவி கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.எம். ரஷீன், இணைந்த வடகிழக்கின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் எம். இஸ்ஸடீன் மற்றும் கெளரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் முதற்கட்ட நிகழ்வுகள் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post