Breaking
Tue. Dec 24th, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

எப்போது ஜனாதிபதிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்ததோ அன்றிலிருந்து அவரது சிந்தனையும் செயற்பாடுகளும் மாற்றம் கண்டுவிட்டது.இதனால் சட்டமும் ஒழுங்கும் ஒருசாராரின் தேவைகளை நிறைவேற்றுபவைாயகவே இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் புல்மோட்டையில் இன்று இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இடம் பெற்ற இந்த கூட்டத்தில் புல்மோட்டையில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் திரண்டு ந்த கூட்டத்திற்கு வந்ததை காணமுடிந்தது.
மேலும் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில்-

எதிர்வரும் 8 ஆம் திகதி நாம் எல்லோரும் நோன்பு நோற்றவர்களாக இந்த சமூகத்தின் நிம்மதியான வாழ்வுக்கும்,மதக் கடமைகளுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தவர்களாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று உங்களது வாக்குகளை இந்த நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்து அவரது வெற்றியில் இந்த நாடு முஸ்லிம்களும்,தமிழர்களும் பங்காளர்களாக மாற உங்களுக்கு அழைப்புவிடுக்கின்றேன்.

இந்த அரசாங்கத்தில் நான் அமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயாங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினோம்,எமது மக்களுக்கு இழைக்ப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டினோம்,முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள்அபகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் முரன்பட்டுக் கொண்ட போதெல்லாம்.அவர்கள் எமது கோறிக்கைகளை பரிசீலிக்க கூட முன்வரவில்வை. எம்முடன் முரண்பட்டார்கள்.ஆனால் நாம் எமது சமூகத்தின் நன்மை குறித்து சில தீர்மானங்களை தாமதமாக எடுக்க நேரிட்டது என்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்படுகின்றது என்று அங்கிருந்த எமது சகோதரர்கள் எம்மிடம் தொலைபேசியில் தெரிவித்த போது நாம் உடனடியாக அங்கு சென்றடைந்தோம்.இங்கு பல வருடங்களாக இந்த பிரதேசத்துக்கு வரும் மக்கள் தொழுதுவிட்டு செல்லும் ஸ்தலமாகும் அதனை அகற்ற அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த பொலீஸாரிடம் தெரிவித்து மூடப்பட்டிருந்த பள்ளியினை திறந்து தொழுகை நடத்தினோம்.

அதே போல் முஸ்லிம்களின் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்ட போது அது தொடர்பிலும் நடவடிக்கையெடுக்க கோறினோம்.அதுவும் இருட்டடிப்பு செய்யப்பட்டது.இவ்வாறு ஒன்றன் பின்னர் ஒன்றாக முஸ்லிம்களின் பொருளாதாரம்,கலாசார பாரம்பரியங்களின் மீது இனவாத அமைப்பு கைவைத்த போது நாம் அதற்கு எதிராக அரசுக்குள இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தோம்.

ஆனால் அரசு எமது எச்சரிக்கையினை் பாரதுாரத்தை கவனத்தில் கொள்ளவில்லை.இந்த நாட்டு மக்களனின் நன்மை குறித்து எமது கட்சி தீவிரமாக சிந்தித்து மக்களின் நியாயமான கோறிக்கைக்கு முதலிடம் கொடுத்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது என்றும் அவர் கூறினார்.

Related Post