நெல் களஞ்சிய சபையிலிருந்து பெருந்தொகையான நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 85,000 மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு வழங்கப்படவுள்ளதாக நெல் களஞ்சிய சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான கேள்வி அறிவிப்பு அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதுவரை நெற் களஞ்சிய சபையில் உள்ள 2 லட்சம் மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மீண்டும் ஒரு தடவை மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் தேவை இல்லை என கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹெரிசன் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அனைத்து நெற் தொகையும் அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.