Breaking
Fri. Nov 15th, 2024

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்துஇந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச தளங்கள்ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.

இந்நிலையில், இத்தகைய தளங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்னும் நடந்துவருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச தளங்களை தடைசெய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாசஇணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் ஒளிபரப்புஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79ன் கீழ், இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .பல இணையதள சேவைவழங்கு நிறுவனங்கள், உடனடியாக 857  ஆபாச தளங்களை தடைசெய்துவிட்டன.

Related Post