Breaking
Sun. Sep 22nd, 2024

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த அரசியலுக்கு மீண்டும் வருவது பொருத்தமற்றது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச தெரிவித்தார்.

மேலும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும், புதிய அரசை அமைப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி  சூழுரைத்துள்ளார்.
அவரின் அறிவிப்புத் தொடர்பிலேயே நீதி  அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிட்ட சந்தர்ப்பம் இலங்கை வரலாற்றில் இதுவரைகாலமும் இடம்பெறவில்லை.
மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிடுவதென்பது ஜனாதிபதி ஒருவருக்கும் பொருந்தாததொன்று. அரசியலுக்கு மீண்டும் வருவதே பொருத்தமற்ற விடயம்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதி பதவிக்கும் செய்யும் அவமரியாதையாகும். மகிந்த மீண்டும் அரசியலுக்கு வருவது எமக்குப் பிரச்சினை இல்லை.
இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுபவர்களை தொடர்ந்தும் அரசியலில் வைத்திருப்பதா இல்லையா என்பதை மக்கள் தீர் மானிப்பர். நாம் பெரும்பான்மை அரசை அமைப்போம் என்ற நம்பிக்கை உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்துளார்.

Related Post