பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவத ற்காக நான்கு கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இதற்கமைய அகில இலங்கை தமிழர் மகாசபை தமது தோடம்பழ சின்னத்தை கப்பல் சின்னமாக மாற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் கட்சி மீன் சின்னத்தை கையடக்க தொலைபேசி சின்னமாக மாற்றியுள்ளது.
ஜாதிக்க ஹெல உருமய கட்சி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என தனது கட்சியின் பெயரை மாற்றி யுள்ளது. அத்துடன் கட்சியின் சங்கு சின்னமும் ‘வைரம்’மாக மாற்றப்பட்டுள்ளது.
‘ஸ்ரீலங்கா தேசிய முன்னணி’யானது எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியாக பெயர் மாற்றம் பெற்றிருப்பதுடன் கிரிக்கெட் மட்டையாகவிருந்த அதன் சின்னம் மலர்மொட்டாக மாற்றம் பெற்றுள்ளது.
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பெயர் மற்றும் சின்னங்களை மாற்றம் செய்வதற்காக தேர்தல்கள் ஆணையாளரினால் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை (03) யுடன் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.