அமெரிக்காவின் இணைய எண்களுக்கான பதிவகம் (ஏ.ஆர்.ஐ.என்.) இனி புதிய ஐ.பி. பதிவதற்கு எண்களே இல்லை எனக் கதறுகின்றனர்.
இன்டர்நெட்டுடன் இயங்கும் ஒவ்வொரு சாதனத்துக்கும், ஒரு தனிப்பட்ட வரிசை எண் தேவை. அதன் செயல்பாடு வாகனங்களுக்கு கொடுக்கப்படும் உரிம எண்ணைப் போல, ஒரளவுக்குத்தான் இதற்கான வரிசை எண்கள் உள்ளன.
‘இன்னும் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில், எங்கள் பதிவதற்கான எண்களே இல்லாமல் போகப்போகிறது’, என எ.ஆர்.ஐ.என்.னின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் தெரிவித்துள்ளார்.
1990-ல் உருவாக்கப்பட்ட இணைய நெறிமுறைப் பதிப்பு 4-ல்(ஐ.பி.வி.4) வெறும் 430 கோடி வெவ்வேறு எண் குறிப்புகளையே உள்ளடக்கியிருந்தது.
இதன் பிறகு உருவாக்கப்பட்ட இணைய நெறிமுறைப் பதிப்பு 6 எண்ணிலடங்கா எண் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. ஐ.பி.வி.4 விரைவில் முடிந்துவிடும் என்பதை உணர்ந்திருந்ததால்தான் ஐ.பி.வி.6-ஐ உருவாக்கினர். இதனால், இன்னும் பல மடங்கு இன்டர்நெட்டுடன் இயங்கும் சாதனங்களை நாம் உபயோகிக்கலாம்.