Breaking
Tue. Dec 24th, 2024
-அஸ்ரப் ஏ சமத்-

கம்பஹா மாவட்டத்தில் பாரளுமன்றத் தோ்தலில் போட்டியிருந்த மேல் மாகாண முதலமைசசா் பிரசன்ன ரனதுங்கவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீக்கியமைக்கு எனது எதிா்ப்பைத் தெரிவிக்கின்றேன்.

மீண்டும் பிரசன்ன ரனதுங்கவின் பெயா் உள் வாங்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் எனது அணியிடன் வேறாக கேட்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா்.

பிரசன்ன ரணதுங்கவின் 2 சகோதரா்கள் ஏற்கனவே கம்பஹாவில் தோ்தல் குதிக்கின்றனா் பிரசன்ன ஏற்கனவே முதலமைச்சா்ராக இருப்பதால் சந்திரிக்கா அவரின் பெயரை நீக்கியதாகவும் ரணதுங்க குடும்பத்தில் ஒரே மாவட்டத்தில் 3 போ் தோ்தல் குதிக்க முடியாது என்ற நிபந்தனையிலே யே சந்திரிக்கா அவரின் பெயரை நீங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரசன்ன முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வலது கை போன்று செயல்படுபவா்.
பிரசன்னவை மீள உள்வாங்கும்மாறு மகிந்த ராஜபக்ச கட்டளை விதித்துள்ளாா்.  இல்லாவிட்டால்  ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளா் சுசிலையும் சோ்த்துக்கொண்டு எனது அணியுடன் தனியாகச் செல்வேன் என அளுத்தமாகச் சொல்லியுள்ளாா்.

Related Post