Breaking
Sat. Nov 16th, 2024

ஐ.நா. சபையில் அதிகாரமிக்க பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள்தான் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

இதில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்பது இந்தியாவின் நெடுநாளைய விருப்பம். இந்த விஷயத்தில் இப்போது இந்தியாவுக்கு சீனா திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது.

ரஷியாவில் உள்ள உபா நகரில் நேற்று முடிந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இது தெரியவந்துள்ளது.

அந்த பிரகடனத்தில், “சர்வதேச விவகாரங்களில் பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் நிலை மற்றும் பங்களிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை சீனா, ரஷியா வலியுறுத்துகின்றன. ஐ.நா. சபையில் அந்த நாடுகள் செய்ய விரும்புகிற பெரிய அளவிலான பங்களிப்பு எதிர்பார்ப்புகளை ஆதரிக்கவும் செய்கின்றன” என கூறப்பட்டுள்ளது.

இந்த பிரகடனத்தில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Related Post