Breaking
Wed. Dec 25th, 2024
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தாங்கள் பெரும் கவலையடைவதாகவும் மனம் குழம்பியுள்ளதாகவும் முன்னணி சிவில் அமைப்பின் பிரதிநிதிக் குழுவொன்று ஜனாதிபதியிடம் நேற்று இரவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி காரியாலயத்தில் கடந்த  இரவு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் காமினி வியங்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி. சமன் ரத்னபிரிய, ஜோஸப் ஸ்டாலின், தர்மசிறி பண்டாரநாயக்க, ரவி ஜெயவர்தன ஆகியோர் உட்பட தம்பர அமில தேரரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கலந்து கொள்ளுமாறு மாதுலுவாவே சோபித தேரருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர் இந்த அழைப்பை நிராகரித்து விட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பேசிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்ததாவது:- முன்னணியின் வேட்புமனு தொடர்பாக தமது கருத்தை எதிர்வரும் 13ம் திகதி நாட்டுக்குத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். அதே போன்று முன்னணியின் வேட்பு மனு நடவடிக்கை தொடர்பாக தாம் இதுவரை பங்குகொள்ளவில்லை எனவும் அது கூட்டமைப்பின் பொதுச் செயலாளரின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சிவில் பிரஜைகள் முன்னணியின் காமினி வியங்கொட கூறியதாவது,

தான் உட்பட ஒரு குழுவினர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதே போன்று ஊழல் மோசடி நிறைந்த அரசியலை ஒழித்துவிடுவதாக ஜனாதிபதி அளித்த உறுதியை இதுவரை மீறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்தர்தர்ப்பத்தில் சிவில் பிரஜைகள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம், கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கையின் போது நீங்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் இருப்பீர்களா என்று கேட்டார்கள். அவ்வாறு இருக்க மாட்டேன் என்று ஜனாதிபதி இங்கு அவரகளிடம் உறுதிப்படுத்தினார். அதே போன்று ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம் பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாகவும் இந்த சிவில் பிரஜைகள் முன்னணியின் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். வியங்கொட இங்கு தெரிவித்ததாவது- முன்னாள் ஜனாதிபதியுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்றும் சகல விதமான சந்திப்புக்கள் தொடர்பான தகவல்களும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

Related Post