உலகில் முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரே சித்தாந்தம் இஸ்லாமாகும். கம்யூனிஸம் கூட இன்று திரை மறைவு முதலாளித்துவ அச்சினிலேயே நகர்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களின் பொருளாதாரங்களை கட்டுப்படுத்தும் யூதர்களும் இலுமினாட்டிகளும் பயப்படுவது வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் சமூக சித்தாந்தகளிற்கும் அதன் பொருளாதார முறைமைக்குமாகும். ஆனால் சிகப்பு தேசம் எதற்காக இஸ்லாத்தை தன் நாட்டில் ஒடுக்க முனைகிறது..?
தனது இராணுவ பூட்சுகளை பாதுகாப்பு என்ற பெயரில் ஷின்-ஷியாங்கின் மூலை முடுக்கெல்லாம் பதிக்க முனைகிறது..?. கன்பூஷியஸ் பாதையில் சில ஒழுக்க நெறிகளே உள்ளன. அடுத்தவரை துன்புறுத்தாமை, பொருமை காத்தல், மூத்தோரை மதித்தல், பலவீனர்களுடன் அன்பாக இருத்தல், தியானத்தில் மன நிம்மதியை தேடுதல் என அதன் அறவழிகள் தொடர்கின்றன. குற்றவியல் பற்றியோ, சிவில் பிரச்சனைகள் பற்றியோ, அரசியல் கொள்கைகள் பற்றியோ எதுவும் சொல்லவில்லை. ஒவ்வொரு சீனானும் இதற்கு பகரமாக மனசாட்சியையே தங்கள் வழிகாட்டியாக கொள்ள வேண்டும். இங்கே தான் சீன அரசிற்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது.
எதுவுமே இல்லாத சிந்தாந்த குளருபடிகள் உள்ள சீனமக்கள் பொருளாதார தேசமாக உலகை மிகைக்க முற்பட்ட போது அவர்களின் ஆன்மீகம், லொகீகம் இரண்டையும் பலன்ஸ் பண்ணும் நியூட்ரல் ரிலிஜன் இல்லாததன் குறையை நிறையவே உணர ஆரம்பித்தனர். ஷின்-ஷியாங்கின் இஸ்லாம் அவர்களை ஆகர்ஷிக்க முனைந்தது. ஆன்மீக தேடலில் ஆரம்பித்த அவர்களது மதத்திற்கான பயணம் இஸ்லாமிய அரசியல் கொள்கை வரை சென்றது. இங்கு தான் பிரச்சனையின் மையப்புள்ளி ஆரம்பமாகிறது.
அபூஜஹலின் மூளை இயல்பாகவே உணர்ந்து கொண்ட அந்த எச்சரிக்கையின் ஓசையை சீன உளவுப்பிரிவு கண்டறிய நிறைய வருடங்கள் பிடித்துள்ளன. மக்கள் குடியரசு, மக்கள் இராணுவம், மக்கள் பாராளுமன்றம், மக்கள் நீதிமன்றம், மக்கள் சுப்ரீம் கவுன்ஸில் என்று மாவோ சேதுங் ஏமாற்றிய அதிகார அரசியல் இஸ்லாத்தின் அரசியல் கொள்கை சீனாவில் எங்கேயும் எப்போதும் பரவக்கூடாது என்பதில் குறியாக செயற்படுகிறது.
ஷின்-ஷியாங்கில் அது குவித்துள்ள செஞ்சேனை இராணுவ உளவாளிகளில் பாதிப் பேர் கூட சீனாவின் ஏணைய மாகாணங்களில் செயற்படவில்லை. இஸ்லாம் சொல்லும் அதிகாரத்தின் மையப்புள்ளியை அவர்கள் உணர்ந்த கொண்டதன் விளைவு இது. நோன்பில் கூட முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகைக்கு ஒன்று கூடுவது அவர்களிற்கு அவர்களின் சகோதர பலம் பற்றிய பயத்தை உருவாக்கியுள்ளது. அதனால் தான் ஏராளம் தாராளமான தடைச்சட்டங்கள்.
முஸ்லிம்களின் சின்ன சின்ன உரிமைகளிற்கான போராட்டங்களை கூட தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் இரும்புக் கரம் கொண்ட நசுக்குகிறது. செயற்பாட்டாளர்களை இராஜ துரோகிகள், உளவாளிகள் என்ற பெயரில் அழைத்து வந்து பொதுமக்கள் முன் மண்டியிட வைத்து தலையின் பிடரியில் சுட்டு அரச கட்டளைகளை நிறைவேற்றுகிறது.
ஆனால் அதையும் தாண்டி இன்றை சேர்வேயின் புள்ளிவிபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா!. 30 வயதிற்கு குறைந்த சீனர்களில் 22.4% மானவர்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்பட்டு முஸ்லிம்களாக மாறி வருகின்றனர் என்பதே. சீனாவில் முஸ்லிம் சிறுபான்மை இனக் குழுக்களாகவேயுள்ளனர். சீனப்பெண்களே இஸ்லாத்தை நேசித்து பெரிதும் மதம் மாறுகின்றனர். சீன அரசின் குடும்பகட்டுப்பாடுகளை புறந்தள்ளி அவர்கள் பல குழந்தைகளை பெறுகின்றனர். இவர்களிற்கு பிறப்பவை அனைத்தும் முஸ்லிம் குழந்தைகளாகவே பிறக்கின்றன.
60 வயதினை கடந்தவர்கள் தான் மன அமைதி நாடி புத்த மதத்தையும் தாவோயிஸத்தையும் பின்பற்ற முனைகின்றனர். அதாவது உற்பத்தி திறன் குறைந்த வினையாக்க திறன் குறைந்த ஓய்வு பராயத்தினர் தான் அப்படிச் செல்கின்றனர். உழைக்கும் இளம் சீன இரத்தம் இஸ்லாத்தை நாடுகிறது. இது இறைவன் வகுத்த விதி. இது தான் அவர்களின் டெஸ்டினி. இதை எந்த சட்டம் கொண்டு செஞ்சீன அரசு நிறுத்தப் போகிறது. ஸைஃய்த் இப்னு அபீவக்காஸ் (ரலி) விதைத்த இஸ்லாம் அல்லவா அங்குள்ளது நம் தேசத்திற்கு இஸ்லாம் வந்தது போலல்லாமல்……….!!!