Breaking
Sat. Mar 15th, 2025

நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 90 நாள் நிறைவடைகிறது.

மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் நிழல் போல ஊழல் கரையும் படிந்து காலத்தோடு நகர்ந்து வந்தது என்பதை பலரும் மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில், திட்டமிட்டு அயராது பிரச்சாரம் செய்து, காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை நரேந்திர மோடி அள்ளினார் என்பதையும் பலரும் மறுக்க மாட்டர்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து இன்றுடன் 90 நாட்கள் நிறைவடைகின்றன. இதையொட்டி பல தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரானக் கட்சித் தலைவர்கள் நரேந்திர மோடி அரசை சாடியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் பாஜக ஆட்சியின் 100 வது நாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாட அக்கட்சித் தயாராகி வருகிறது.

Related Post