Breaking
Mon. Dec 23rd, 2024

வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் ஒருவரை இரு தினங்களின் பின் உயிருடன் மீட்ட  பொலிஸார்

வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர் துடுகலகே துஷார (வயது 33) என்கின்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் இளைஞர் கடந்த 8ஆம் திகதி இரவு இப்பாழடைந்த கிணற்றிற்கு அருகாமையால் நடந்து செல்கையில் தற்செயலாக வீழ்ந்துள்ளார். இரண்டு தினங்களும் நீராகரம் இன்றி மிகவும் கஷ்டமான நிலையை அடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இரண்டு தினங்களாக குறித்த நபர் காணாமல்போனதையடுத்து வரக்காபொல பொலிஸாருக்கு தெரிவித்ததோடு பிரதேசவாசிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இப்பிரதேசவாசியொருவர் பாழடைந்த கிணற்றருகில் பயணம் செய்தபோது கிணற்றினுள் ஒருவர் இருப்பது அறிந்து அவர் காணாமல்போன நபராக இருப்பார்

என சந்தேகித்து, இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வெகுவிரைவாக வரக்காபொல பொலிஸ் அதிகாரியொருவரால் மூன்றாவது தினம் கிணற்றினுள் வீழ்ந்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

Related Post