Breaking
Mon. Dec 23rd, 2024

நஸீர் -அட்டாளைச்சேனை

அ.இ.ம.காவுக்கம் அதன் தேசியத் தவைலருமான றிஷாத் பதியுதீனுக்கும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியல் இருக்கும் செல்வாக்கை இல்லாதொழிக்கும் – வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சதித் திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.

பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காவின் வேட்பு மனுவை இரத்துச் செய்வதற்கு இன்று எடுக்கப்பட்ட முயற்சியின் மூலம் அந்த சதித் திட்டம் அம்பாறை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தில் அமைச்சர் ரிசாதினால் உருவாக்கப்பட்ட ஹூனைஸ் பாறுக் – இனவாதிகளோடும் இனவாத ஊடகங்களோடும் இணைந்து எவ்வாறு சதித் திட்டங்களை தீட்டினாரோ அவ்வாறான ஒரு சதித் திட்டத்தின் மறு உருவமாகவே இன்று அம்பாறை கச்சேரியில் நடந்தேறிய சதித்திட்டம் முஸ்லிம் சமுகத்தினால் பார்க்கப்படுகின்றது.

எந்தவொரு ஆதாரமுமற்ற, அ.இ.ம.காவின் அம்பாறை வருகையினால் பாதிப்படையலாம் என நோக்கப்படுகின்ற, அ.இ.ம.கா வின் வருகை அந்த நபர்களின் அந்த கட்சிகளின் செல்வாக்கை இழக்கச் செய்து விடலாம் என்ற அச்சத்தின் உள்ளவர்களினாலும் அக்கட்சிகளினாலுமே மேற்சொன்ன சதித் திட்டம் அரங்கேறியுள்ளது.

அ.இ.ம.கா வினால் இன்று அம்பாறை மாவட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு முகா வின் வேட்பாளர் மன்சூரினாலும் ஐதேகவின் வேட்பாளர் தயாகமகேயினாலும் ஒரே நேரத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையானது மறுபக்கம் தயாவுக்கும் ஹக்கீமுக்குமிடையிலான மறைமுக உறவை எடுத்துக் காடடுகின்றது.

ஊடகங்கள் மத்தியில் தயாகமகேயை ஹக்கீமும் – ஹக்கீமை தயாகமகேயும் இனவாத நோக்கோடு அல்லது இனவாத கருத்துக்களை முன்வைத்து பரஸ்பரம் தூற்றிக்கொண்டு வருகின்றமை இதன் மூலம் பொய்ப்பிக்கப்படுவதாகவே இச்சம்பவத்தின் பிற்பாடு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் எழுகின்ற ஐயப்பாடாக உள்ளது.

வன்னி மாவட்டத்திலிருந்து ரிசாத் பதியுதீனையும் அவரது கட்சியையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற நப்பாசையோடு தனித்துக் களமிறங்கியுள்ள முகா தலைவர் ஹக்கீம் – அது சாத்தியப்படாது என்ற எதிர்வு கூறலுக்கு மத்தியில் ரிசாதின் கட்சியை அம்பாறை மாவட்டத்திலிருந்தாவது துரத்தியடிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவுமே இன்றைய வேட்பு மனு எதிர்ப்பு நோக்கப்படுகின்றது.

முகா வின் கோட்டையாக வர்கணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் அக்கட்சி பாரிய செல்வாக்கை; அ.இ.ம.காவின் வருகை இழக்கச் செய்து விடும் என்ற முகா தலைவருக்கு ஏற்பட்ட அச்சப்பாட்டை மேற்சொன்ன வேட்பு எதிர்ப்பு சுட்டிக்காட்டி நிற்கின்றது.

இதன் ஒரு பிரதிபலிப்பாக நேற்று(12) சிறிகொத்த உயர் தலைமைகளைச் சந்தித்த ரவூப் ஹக்கீம் – ‘ அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காவை களமிறக்க வேண்டாம்: அவ்வாறு செய்யும் பட்சத்தில் எதையும் விட்டுக்கொடுப்பதற்கும் தான் தயாராக இருக்கின்றேன், இதனை ரிசாதிடம் கூறுங்கள்’ என்று ரவூப் ஹக்கீம் மன்றாடியிருப்பது மேற்சொன்ன விடயங்களுக்கு மேலும் சான்றாக அமைந்துள்ளது.

அதுமட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா களமிறங்கும் பட்சத்தில் தனது கட்சிக்கு கிடைக்க இருக்கின்ற 02 ஆசனங்களில் ஒன்றை ரிசாத் அணி பறித்துக் கொள்வதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்களிடத்தில் மட்டுமன்றி அரசியல் தலைமைகள் மத்தியிலும் தனது செல்வாக்கு பாதிப்படைந்து விடும் என்ற ஐயப்பாட்டின் வெளிப்பாடாகவுமே இன்றைய அ.இ.ம.கா வின் வேட்பு மனு எதிர்ப்பு செயற்பாடு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களால் நோக்கப்படுகின்றது.

ரிசாதை அழிக்க வேண்டும் என்று பொதுபலசோனவின் மூலமாக தொடங்கிய இனவாதச் செயற்பாடு மகிந்தவின் ஊடாக , ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு இவர்களின் ஏஜென்டாக ஹூனைஸ் செயற்பட்டு வந்த இத்தருணத்தில் தான் புதிதாக ஐதேக வின் தேசிய அமைப்பாளரான தயாகமகேயும் இணைந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்கள வாக்குகளால் மட்டும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் இருக்கும் தயாகமகேயிற்கு முஸ்லிம்களின் பெரும் தொகையான வாக்குகளும்; அவரது வெற்றிக்காக தேவைப்படும் காலகட்டம் இது.

அவரது அந்த வெற்றிக்கான வாக்குகளை அ.இ.ம.கா சுவீகரித்து ஐதேகவின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற தயாகமகேயின் வெற்றிவாய்பை அ.இ.ம.கா தட்டிப்பறித்து விடும் என்ற உண்மையை உணர்ந்ததனால்தான் தயா கமகேயும் இந்த ரிசாதை அழிக்கும் போராட்ட குழுவில் இணைந்துள்ளதாக முஸ்லிம் சமுகத்தினால் இன்று நோக்கப்படுகின்றது.

எனவே அம்பாறை மாவட்டத்தில் இன்று அ.இ.ம.கா வேட்பு மனு தாக்கல் செய்த வேளை திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனம் என்ற இலக்கை எட்டி அடுத்த ஆசனத்திற்கான ஒரு எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது என்பதை மேற்சொன்ன சதிகள் மூலமும் மக்கள் வெள்ளத்தின் மூலமும் தெளிவாக உணரக் கூடியதாக உள்ளது.

Related Post