Breaking
Mon. Dec 23rd, 2024

அகமட் எஸ். முகைடீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.

பிரமான்டமான வாகனத் தொடர் அணியாகச் சென்று அக்கட்சியன் பிரதம வேட்பாளராகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகருமான அப்துல் மஜீட் மற்றும் வேட்பாளர்களான முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் ஆகியோர் அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் குறித்த வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதன்பின்னர் பிரதம வேட்பாளர் அப்துல் மஜீட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்​கையில் மனித நேயம் கொண்ட ஒரு தலமையின் கீழ் போட்டியிடுவதையிட்டு பெருமையடைகின்றோம். எமது வேட்பாளர் சளைத்தவர்கள் அல்ல. எம்மோடு போட்டியிடுகின்றவர்கள் அனைவரினாலும் அறியப்பட்டவர்கள். இத்தேர்தலானது கடைசியாக நடைபெறுகின்ற விகிதாசார முறைத் தேர்தலாக காணப்படுகின்றது. இத்தேர்தலில் எங்ளோடு இணைந்து வாருங்கள், உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் எனக் குறிப்பிட்டார்.

இங்கு எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுடைய அணியானது பல் வேறுபட்ட புலமைகளைக் கொண்டவர்களை உள்ளடக்கிய அணியாக காணப்படுகின்றது. எமது அணியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இன்னும் ஏழு அவ்வாறான உறுப்பினர்களைக் கொண்டவர்களாக நாங்கள் களமிறங்கி இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இங்கு முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கருத்துத் தெரிவிக்கையில், ஏனைய கட்சிகளுக்கு பாரிய சவலான ஒரு அணியாக நாங்கள் காணப்படுகின்றோம். நீங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் இது இரு சவாலான தேர்தலாக அமையப் போகின்றது, நாங்கள் ஒரு பலம்மிக்க ஆணியாக காணப்படுகின்றோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாங்கள் புதிய சிந்தனையோடு சமூகத்திற்கான அர்பணிப்புகளைச் செய்கின்ற தலைமையோடு இத்தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல்

பொத்துவில்லைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகருமான அப்துல் மஜீட், சம்மாந்துறையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில், சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், சம்மாந்துறையைச் சேர்ந்த கல்விமான் அன்வர் முஸ்தபா, மருதமுனையைச் சேர்ந்த மைஹோப் நிறுவனத்தில் அதிபர் எம்.எஸ்.எம்.நதீர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏ.சி.முகம்மட் சமீர், அக்கரைப்ற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.முகம்மட் நபீல், கல்முனையைச் சேர்ந்த விரிவுரையாளர் எம்.ஏ.கலீலுல் றஹ்மான், நிற்தவூரைச் சேர்ந்த தொழில் அதிபர் எப்.எம்.ஹிசான், இறக்காமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏ.எல்.சுலைமா லெப்பை ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

Related Post