Breaking
Sun. Nov 17th, 2024

யால தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யால சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிறுத்தை மற்றும் ஏனைய மிருகங்களை கண்டவுடன் ஏனைய வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்துகின்றனர்.

இவ்வாறு அறிப்படுத்தியதும் விலங்குகள் இருக்கும் இடத்தை நோக்கி ஏனைய வாகனங்கள் வேகமாக வருகின்ற போது சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் வாகனத்தில் அடிப்பட்டு இறந்து விடுகின்றன.

எனவே இதன் காரணமாக யால சரணாலயத்தினுள் செல்லும் பயணிகள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 யால சரணாலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாகனங்களில் அடிப்பட்டு இறந்த நிலையில் சிறுத்தைகள், யானைகள், கரடிகள் மற்றும் மான்கள் ஆகியன  மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் யால தேசிய சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளுக்கான இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

985 சதுர கிலோமீற்றர் நிலபரப்பில் அமைந்துள்ள யால தேசிய சரணாலயத்திற்கு வருடத்திற்கு ஒரு இலட்சத்துக்கு அதிமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post