Breaking
Wed. Dec 25th, 2024

ஜனா­தி­பதி தேர்­தலின் போது முஸ்லிம் வாக்­குகள் திட்டமிட்டு பக்­க­சார்­பாக அளிக்­க­பட்­ட­மை­யினால் தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­க­டிக்கப்­பட்டார் என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் ஊட­க­ப்­பேச்­சாளர் வைத்­தி­ய­க­லா­நிதி வசந்த பண்­டார தெரித்தார்.

கொழும்பு தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் அலு­வ­லுகத்தில் இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் தெரி­விக்­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாட்டின் சிங்­கள பௌத்த மக்கள் அனை­வ­ரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹி­ந்த­வுக்கே வாக்­க­ளித்­தனர். அதனால் சிங்­கள மக்கள் செறிந்து வாழும் 10 தேர்தல் மாவட்டங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வெற்­றி­பெற்­றி­ருந்­த­துடன் தனி­யொ­ரு­வ­ராக 52 இலட்ஷம் வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

ஆனால் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் போதி­ய­ளவு இல்­லாத கார­ண­தி­கா­லேயே அவர் தோல்­வி­யுற்றார். சிறு­பான்மை வாக்­குகள் திட்­மிட்டே வழங்­கப்­பட்­டன. முக்­கி­ய­மாக முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் அவ்­வாறு திட்­ட­மிட்டு வாக்­க­ளித்­த­மை­யினால் தான் மஹிந்த வீழ்த்­தப்­பட்டார் என்­பதே உண்மை.

முன்னர் 1977 ஆம் ஆண்டு நாட்டில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் ஆட்சி செய்த போது நாடு முழு­வதும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. அவ்­வா­றான நிலை­மை­களை நாட்டு மக்­க­ளி­டையே மீண்டும் ஏற்­ப­டுத்த கூடாது என்ற எண்­ணத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தமது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வந்தார். இதனை கரு­த்திற்­கொண்டு முஸ்லிம் மக்கள் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலின் போது வாக்­களிக்க வேண்டும்.

நாட்டின் சிங்­கள மக்கள் பிர­தமர் ரணில் சிங்­கள விரோதி என்­பதை அறிந்­துள்­ளனர். அத­னா­லேயே கடந்த தேர்­தலின் போது சிங்­கள மக்கள் அதி­க­பட்ச வாக்­கு­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு வழங்­கி­யி­ருந்­தனர். எதிர்­வரும் தேர்­தலின் போதும் அவ்­வாறே வாக்­க­ளிப்பர் என்­பதில் சந்­தேகம் இல்லை.

எவ்­வா­றா­யினும் முன்னாள் ஜனா­தி­பதி குரு­ணாகல் மாவட்த்தில் போட்­டி­யிட முடிவு செய்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு வழிவகுத்த பாராளுன்ற உருப்பினர்களான சுசில்,விமல்,வாசு, தினேஸ், டலஸ் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்குரியவர்கள் மஹிந்தவின் வெற்றியின் பெரும்பங்கு அவர்களையே சாரும்.

Related Post