Breaking
Mon. Dec 23rd, 2024

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் அல்­லது அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சட்­டத்தை மீறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், பொது­மக்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க முடியும் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இது குறித்த முறைப்­பா­டு­களை தொலை­பேசி அல்­லது மின்­னஞ்சல் மூலம் அறி­விக்க முடியும் என, பொலிஸ் தலை­மை­ய­கத்தால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

வேட்­பு­மனு வழங்­கிய தினத்தில் இருந்து தேர்தல் நிறை­வ­டையும் வரை பேரணி, வாகனப் பேரணி, ஊர்­வ­லங்கள் மற்றும் வீடு­க­ளுக்கு சென்று வாக்கு கேட்­பது உள்­ளிட்­டவை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். அதேபோல் பொது இடங்­களில் பதாகைகள், சுவரொட்டிகள் போன்­ற­வற்றை காட்­சிப்­ப­டுத்­து­வதும் சட்­ட­வி­ரோ­த­மா­னது என பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இது குறித்த முறைப்­பா­டு­களை 119 எனும் அவ­சர இலக்­கத்­திற்கு அல்­லது பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் 011 23 95 605 , 011 238 40 24 ,011 25 43 811 மற்றும் பொலிஸ் விசேட தேர்­தல்கள் பிரிவின் 011 23 87 999 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கோ தொடர்பு கொண்டு அறி­விக்­கலாம். அல்­லது இவ்­வா­றான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்­பி­லான வீடியோ ஆதா­ரங்கள் இருப்பின் அதனை policemedia.media@gmail.com  அல்­லது telligp@police.lk  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என பொலிஸ் தலைமையும் குறிப்பிட்டுள்ளது.

Related Post