மீண்டும் களமிறங்கியுள்ள மஹிந்த ராஜபக் ஷவை ஆகஸ்ட் 18 ஆம் திகதியுடன் அடியோடு ஒழித்து குழி தோண்டி புதைக்க ஆதரவு வழங்குமாறு மக்களை கோருகின்றேன். மஹிந்தவை அடியோடு துடைத்தெறிவதை உறுதிப்படுத்துங்கள். என்று பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலை வருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. கல்வித்துறை சுகாதாரத் துறை வீழ்ச்சி கண்டது. நாடு கடன் சுமையால் வாடியது. ஊழல் தலைவிரித்தாடியது. மஹிந்த மக்களைசிந்திக்கவில்லை. கண்டி பெரஹெரவை நிறுத்திவிட்டு கார் பந்தயம் நடத்தினர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் எம். பி. க்களான லக்ஷ்மன் கிரியெல்ல ராஜித்த சேனாரட்ன கருஜசூரிய கபிர் ஹஷீம் சுவாமி நாதன் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலர் இந்த முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனவரி எட்டாம் திகதி நான் கூறியதை கேட்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்தினீர்கள். எமக்கு அரசாங்கத்தை பெற்றுத் தந்தீர்கள். நாங்கள் 100 நாள் திட்டத்தைக் கொண்டு: பல வேலைத்திட்டங்களை செய்தோம். நாட்டில் மீண்டும் இன மத ஒற்றுமை ஏற்பட்டது. வௌ்ளை வான் கலாசாரம் முடிவுக்கு வந்தது. சிங்கள தமிழ் முஸ்லிம் மற்றும் பௌத்த இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மக்கள் ஒற்றுமையாக வாழ ஆரம்பித்தனர்.
முக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். சலுகைகளை வழங்கினோம். ஆத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தோம். 20 ஆவது திருத்தத்தை கொண்டுவர முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. காரணம் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜக்ஷவின கை மீண்டும் ஓங்க ஆரம்பித்தது.
எனவே தான் ் ஜனவரி எட்டாம் திகதி பெற்ற வெற்றியை உறுதிபடுத்துவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். புதிய கூட்டணியில் யானை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஜனவரி எட்டாம் திகதி எமக்கு ஆதரவு வழங்கியதைப்போன்று 18 ஆம் திகதியும் ஆதரவு வழங்குங்கள்.
நான் கண்டி மாவட்டத்தை மறக்கவில்லை. அடுத்த ஐந்து வருடங்களில் கண்டி மாவட்டத்தை சிறந்த அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றியமைப்பேன். எமது அபிவிருத்தி திட்டம் உங்களை பலப்படுத்தும். ஆனால் ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டம் ராஜபக்ஷ குடும்ம்பத்தை பலப்படுத்தும் எனபதனை மறக்கவேண்டாம்.
எனவே இது தீர்க்கமான தேர்தலாகும். மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. கல்வித்துறை சுகாதார துறை வீழ்ச்சி கண்டது. நாடு கடன் சுமையால் வாடியது. ஊழல் தலைவிரித்தாடியது. முஹிந்த மக்களை சிந்திக்கவில்லை. கண்டி பெரஹெரவை நிறுத்திவிட்டு கார் பந்தயம் நடத்தினர்.
நான் எதிரவரும் 5 வருடங்களில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவென். ஏனக்கு இதில் அனுபவம் உள்ளது. ஜே. ஆர். ஜயவர்த்தன மற்றும் பிரேமதாச ஆகியோருடன் வேலை செய்துள்ளேன். நூட்டில் 45
கைத்தொழில் வர்த்தக பிரதேசங்களை உருவாக்குவென். துற்போது குருணாகல் மாவட்டத்துக்கு உலகின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான வொக்ஸ் வோகன் நிறுவனத்தின் தொழிற்சாலையை கொண்டுவந்துள்ளேன்.
ஊழலை ஒழிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் ஊழல் ஒழிப்பு சாசனத்தை இலங்கையில் சட்டமாக்குவேன். ஊழலை ஒழிக்க அமெரிக்கா இந்தியா ஐரொப்பிய ஒன்றழய நாடுகள். துற்போது எமக்கு உதவுகின்றன. எதிரவரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு முன் கண்டி அதிவெக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணி ஆரம்பமாகும்.
எனவே மீண்டும் களமிறங்கியுள்ள மஹிந்த ராஜபக்ஷவை ஆகஸ்ட் 18 ஆம் திகதியுடன் அடியோடு ஒழித்து குழி தோண்டி புதைக்க ஆதரவு வழங்குமாறு மக்களை கோருகின்றேன். மஹிந்தவை அடியோடு துடைத்தெறிவதை உறுதிபடுத்துங்கள்.
இந்த பிறப்பில ் ஊழல் ெ சய்கின்றவர்கள் மறுபிறப்பில் நாய்களாக பிறப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அப்படியாயின் ஐ.ம.சு.மு. வில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்யக் கூடாது. ஆவ்வாறு செய்தால் அடு்த்த பிறப்பில் அவர்கள் நல்லவர்களாக பிறப்பார்கள்