Breaking
Sat. Nov 16th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகமனதான தீர்மானமாகும். அத்துடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஏக­ம­ன­தான தீர்­மா­னத்­துக்கு அமை­யவே பிர­தமர் தெரிவுசெய்­யப்­ப­டுவார்.

யார் தடுத்­தாலும் மஹிந்­தவை பிர­த­ம­ராக்கியே தீருவோம் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கட்­சியின் தலைமைப் பத­வியில் இருந்து நீக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அவரே தொடர்ந்தும் தலை­வ­ராக இருப்பார் எனவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அதன் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அனுரா பிரி­ய­தர்­சன யாப்பா தெரி­விக்­கையில், ஐக்­கிய தேசியக் கட்சி தனது தேர்தல் வெற்­றியை தக்­க­வைக்கும் நோக்­கத்தில் நாட்டில் அரச உடை­மை­க­ளையும், அர­சாங்க சொத்­துக்­க­ளைவும் பாவித்து தமது தேர்தல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றது. அரச வாக­னங்கள், அரச ஊழி­யர்கள் என அரச வளங்கள் அனைத்­தையும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றது. எனவே தேர்தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்­து­வதே எமது பிர­தான இலக்­காக்கும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியை பலப்­ப­டுத்தும் பின்­ன­ணியை உரு­வாக்க நாம் இடம்­கொ­டுக்க மாட்டோம். எமது அர­சாங்­கத்தை உரு­வாக்­கவே நாம் முயற்­சிக்­கின்றோம். மாறாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு அல்ல. எதிர்­வரும் தேர்­தலில் எமது கட்­சியை பலப்­ப­டுத்தும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். மாவட்ட மட்ட கூட்­டங்கள் மற்றும் மக்­களை ஒன்­றி­ணைக்கும் அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அறிக்கை தொடர்பில் எம்மால் எந்த கருத்­தையும் தெரி­விக்க முடி­யாது. ஒரு­சில முரண்­பாட்டுக் கருத்­துக்கள் உள்­ளன. அவை தொடர்பில் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடி தீர்­மா­னங்­களை எடுப்போம். அத்­தோடு ஜனா­தி­ப­தியின் அறி­வித்­த­லுடன் எமது கட்­சிக்குள் சிறந்ததொரு முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. அதா­வது இந்த சம்­ப­வத்­துடன் பிரிந்­தி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் ஒன்­று­பட்டு ஒரு அணியில் வந்­துள்­ளனர். கடவுள் வரம் கொடுத்­த­தைப்போல் அனை­வரும் ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் நாம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம். மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஆட்­சியை அமைப்போம். இதில் கருத்து தெரி­வித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த குறிப்­பி­டு­கையில், மஹிந்த ராஜபக் ஷ தோற்கும் தலைவர் அல்ல நாம் அவரை தோற்க விட­மாட்டோம். தோல்­வியை தழு­வு­வ­தாக இருந்தால் நாம் தேர்­தலில் கள­மி­றங்க மாட்டோம்.

வெற்றி பெறுவோம் என்று தெரிந்­ததன் கார­ணத்­தினால் தான் தைரி­ய­மாக களத்தில் இறங்­கி­யுள்ளோம். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ கட்­சிக்குள் மீண்டும் வரு­வது நாட்­டையும் கட்­சி­யையும் பாது­காக்­க­வே­யாகும். அதேபோல் அவர் ஆட்சி அதி­கா­ரத்­துக்கும், பத­விக்கும் ஆசைப்­ப­டு­பவர் அல்ல. அப்­படி இருந்­தி­ருந்தால் அவர் கட்சி தலைமை பத­வி­யையோ அதி­கா­ரத்­தையோ விட்­டுக்­கொ­டுத்­தி­ருக்க மாட்டார். கடந்த காலத்தில் முன்­னைய தலை­வர்கள் தமது அதி­கா­ரத்தை எவ்­வாறு கையாண்­டார்கள் என்­பதை நாம் பார்த்­துள்ளோம் என்றார்.

கேள்வி :- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைமைப் பத­விக்கு கேள்­விக்­குறி ஏற்­பட்­டுள்­ளதா ?

பதில் :- இல்லை, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஆவார். அவரை நீக்க வேண்­டிய அவ­சியம் யாருக்கும் இல்லை. அவரே தொடர்ந்தும் கட்­சியின் தலை­வ­ராக இருப்பார். நாம் ஏனை­ய­வர்­கள்போல் சதி செய்து அவரை நீக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

கேள்வி :- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தமர் பத­விக்கு மஹிந்­தவை நிய­மிக்க அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். அப்­ப­டி­யாயின் ஏன் மஹிந்த போட்­டி­யி­டு­கின்றார்?

பதில் :- பிர­தமர் வேட்­பாளர் யார் என்­பது கட்­சியின் ஏக­ம­ன­தான தீர்­மா­னத்துக் அமை­யவே முடி­வெ­டுக்­கப்­படும். ஜனா­தி­ப­தியே அதை பல சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்­துள்ளார். ஆகவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஏக­ம­ன­தான தீர்­மா­னத்தை கேட்டால் அனை­வரும் மஹிந்­தவின் பெய­ரைத்தான் முன்­வைப்­பார்கள். ஆகவே நாம் ஆட்சி அமைத்தால் பிர­தமர் பத­விக்கு மஹிந்­தவை கொண்­டு­வ­ருவோம். எமது தீர்­மா­னமே கட்­சியில் இறுதி முடி­வாக அமையும்.அதேபோல் ஜனா­தி­பதி எமது கோரிக்­கைக்கு இணங்­குவார். மேலும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளாக நாம் தான் இருக்கின்றோம். மேலும் ஜனாதிபதிக்கும் எமக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. ஜனாதிபதி சில அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளார். ஆகவே அதை நாம் நிவர்த்தி செய்வோம். மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்கள் அது நடக்கவில்லை, குழுத்தலைவர் வழங்கப்படாது என தெரிவித்தனர் அதுவும் நடக்கவில்லை. இப்போது பிரதமராக்க மாட்டோம் என்கின்றனர் அதுவும் நடைபெறாது. மஹிந்தவை நாம் பிரதமர் ஆக்குவோம்.

Related Post