ஆஸ்திரேலியாவில் 2 வயது குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிச்சென்ற தந்தையை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
சிட்னியைச் சேர்ந்த ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். நேர்முகத் தேர்வு நடைபெறும் பெல்லா விஸ்டா என்ற பகுதி வந்தவுடன், தனது குழந்தையை காரினுள் வைத்து பூட்டிவிட்டு சென்று விட்டார். பூட்டிய காருக்குள் குழந்தை இருப்பதை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிச் செல்வது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது.