புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சர்கள் பலத்த பாராட்டுகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்கிழமை நாட்டிற்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மத்தியில் உற்சாகமான மனோநிலை காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பல அமைச்சர்கள் சிறிசேனவின் உரையை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். பின்னர் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னரும் மகிந்தராஜபக்சவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக அமைச்சர்கள் ஜனாதிபதியை பாராட்டியுள்ளனர்.
பின்னர் ஜனாதிபதி பொலனறுவையில் மரணச்சடங்கொன்றில் கலந்துகொள்வதற்காக செல்வற்கு முன்னர் ஸ்ரீலஙகா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் விசேட பொதுக்கூட்டம் தலைவரின் அனுமதியின்றி கூட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்;டி கட்சியின் தலைமையகத்திற்கு தடை உத்தரவு கடிதத்தை அனுப்பிவைத்தார்.