Breaking
Sat. Nov 16th, 2024

எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பிரதமர் பதவி யாருக்கு வழங்குவதென எம். பிகள் அன்றி ஜனாதிபதியே தீர்மானிப்பதாக குறிப்பிட்ட அவர், நல்லாட்சிக்கு ஜனாதிபதியின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் ஐ. தே. க பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் ஐ. ம. சு. மு. ஆதரவாளர்கள் கூட தங்களை ஆதரிப்பதாக குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட தங்களுக்கு ஆதரவாகவே பிரசாரம் செய்ய இருப்பதாவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இங்கு வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

கட்சியை விட நாடே பிரதானமானது என்பதாலே நாம் ஐ. தே. க வுடன் கைகோர்த்தோம். நாம் செல்வதை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. எங்களை தேசிய பட்டிய லினூடாக நிறுத்தவும் முயன்றனர். ஜனாதிபதி கூட நானில்லாமல் சு. க. வுக்கு பாதகம் என்றார். நாம் ஐ. தே. க வுடன் இணைய முன் ஜனாதிபதியுடன் பேசினோம். அவரும் நல்லாட்சிக்காக தம்மை அர்ப்பணித்துள்ளார்.

சு. க. விற்குள் ஏற்பட இருக்கும் பிளவை தடுக்கவே மத்திய குழுவை கூட்ட இடைக்கால தடையுத்தரவு பெறப்பட்டது. எம்மை சு. க மத்திய குழுவிலிருந்து நீக்கினா லும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் வருவோம். ஜனாதிபதியின் உரை ஐ. தே. கவுக்கோ சு. கவுக்கோ அன்றி நாட்டுக்கே சாதகமான உரையாகும். அவர் நல்லாட்சியின் பக்கம் இருப்பது அவரின் உரை மூலம் உறுதியாகிறது.

நாம் ஐ. தே. க வில் இணைந்தாலும் சு. க ஆதரவாளர்கள் எம்முடன் உள்ளனர். நாம் வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் அவர்கள் எமக்கு பாரிய வரவேற்பளித்தனர். ஆனால் சு. க அமைச்சர்களை வரவேற்க கூட்டம் இல்லை. கீழ் மட்டத்திலிருந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் செயற்பாடுகளில் இறங்கவில்லை.

ஐ. தே. வினூடாகவே நாட்டில் நல்லாட்சி ஏற்படும். அதன் பலனை மக்கள் கடந்த காலத்தில் அனுபவித்தனர். அரசாங்க ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. 13 வகை அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. 15 வருடத்தின் பின் ஓய்வூதிய முரண்பாடு தீர்க்கப்பட்டது. கேஸ் விலை மீண்டும் குறைக்கப்பட்டது.

நாம் மிகச் சரியான பக்கம் இணைந்துள் ளோம். ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவரை கட்சித் தலை மைத்துவத்திலிருந்து நீக்க முடியாது. கட்சி யாப்பு படி அது இயலாத காரியம். ஐ. தே. க தலைவரை நீக்க பல வருடங்கள் முயற்சி நடந்தாலும் அது முடியவில்லை.

ஆட்சியை முன்னெடுக்க தேவையான நிதி எம்மிடம் இருக்கிறது. நிதிப் பிரச்சினை அரசாங்கத்துக்கு கிடையாது. கடந்த காலத்தில் சுங்க வரி மோசடி செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது சுங்க வரி வருமானம் அதிகரித்துள்ளது.

அடுத்த தேர்தலில் ஐ. தே. க பெரும்பான்மை பலத்துடன் வெற்றி யீட்டி ஆட்சியமைக்கும். எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என்றார்.

Related Post