முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலக்கி கொள்ள வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது.
ஜே.வீ.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மாத்தறை – வெலிகமயில் அண்மையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அநுராதப்புர கூட்டத்திற்கு சென்று திரும்பும்போது. கஞ்சாவை ஏற்றி வருகின்றனர்.
மஹிபால ஹேரத்தின் கஞ்சா போதைப் பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.
இவ்வாறான சந்தர்பத்தில் தமது வாகனத்தை கடத்திச் சென்றுள்ளதாக அவர் காவற்துறையில் முறையிடுகிறார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வாய்பு வழங்கினால், அந்த கட்சி மீண்டும் ராஜபக்ஷக்களின் கீழ் இயங்கும்.
மீண்டும் அந்த கட்சி மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ஷ, யோசித்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சசிந்ர ராஜபக்ச ஆகியோரின் கைகளுக்கு செல்லும் என ஜே.வீ.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.