சீனாவின் மிக பெரிய இறை இல்லம் ஒன்றில் ஈகை பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான சீன முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷன் ஜோங் பகுதியில் அமைந்துள்ள இறை இல்லம்தான் அது.
மஸ்ஜித் நிரம்பி வழிந்ததால் மஸ்ஜிதை சுற்றியுள்ள வீதிகள் எங்கும் தொழுகை விரிப்புகளே காட்சி தந்தன. இஸ்லாத்ததை அடக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை சீன அரசு மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு இறை இல்லத்தில் இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகைக்காக குழுமியது சீன அரசை திணறவைத்திருக்கிறது.
எதிர்க்க எதிர்க்க வளமுடன் வளரும் மார்க்கமாக இஸ்லாம் அமைந்துள்ளது என்பதற்கு உரிய சிறந்த சான்றுகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.