Breaking
Sat. Nov 16th, 2024

– மௌலவி செய்யது அலி ஃபைஜி –

இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சி நகரிலிருந்து சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவூதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்ட சவூதி விமானம்.

இதில் பயணித்தவர்களில் பிறந்து ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்க பட்டது.

இது விமானிக்கு சொல்லப் படவே தனது விமனத்தின் பயணபாதையை உடனடியாக மாற்றி விமானத்தை அவர் மஸ்கட் விமான நிலையத்தில் உடனடியாக தரை இறக்கி அந்த பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.

மஸ்கட்டில் அந்த குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய பட்டு அந்த குழந்தை சீரான நிலைக்கு வந்த பிறகு விமானம் மறுபடியும் ரியாத்தை நோக்கி பயணித்தது. சவூதி விமானியின் இந்த மனிதநேய பணி அனைத்து பயணிகளின் ஆதரவையும் பெற்றது.

Related Post