குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் சஹாப்தீன் முஹமட் சாபி வைத்திய அதிகாரியாவர். இவர் நீண்ட காலமாக சமூக சேவையில் கால் பதித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்டவர். இவர் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இவ பத்திரிகைக்கு வழங்கி செவ்வி
நேர்காணல் இக்பால் அலி
நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன?
நான் ஒரு வைத்திய அதிகாரியாக இருந்து சேவைகள் ஆற்றி வந்துள்ளேன் என்பவற்றுக்கப்பால் அதிகளவு சமூக இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தேன் என்பதை குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்கள் நன்கறிவார்கள்.
எமது சமூகம் அதிகம் தேவைப்பாடுடைய சமூகம் என என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அரசியலில் ஒரு அனாதையான பின்தங்கிய சமூகமாக தொடர்ந்து இருக்குமாயின் எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பே கேள்விக் குறியதாகிவிடும் என்ற கவலை எனக்கிருந்தது.
இந்தப் பகுதியில் கல்வியை இடைநடுவில் கைவிட்ட இளைஞர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என அறியாத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. கல்வி அறிவுள்ள இளைஞர் சமூகத்தை கட்டி எழுப்புவதன் மூலம்தான் எமது சமூகம் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்பதே என்னுடைய இலக்காகவும் இருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு குருநாகல் மாவட்ட முழுவதும் கல்வி விழிப்புணவூட்டும் நடடிவடிக்கையில் ஈடுபட்டு வந்தேன். இதேபோல இலவச வைத்திய முகாம்களையும் நடத்தி எமது சமூகத்தின் ஆரோக்கியமான சுகாதார வாழ்வின் மேம்பாட்டுக்காக வழிகாட்டல்களைச் செய்துள்ளேன்.
இவ்வாறன சமூக நலப் மனப்பதிவுகள் தான் என்னை இயல்பாகவே அரசியலுக்குத் தள்ளிட விட்டது. அரசியல் ரீதியாக அதிகளவு சேவைகள் செய்யவும் மற்றும் சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டலை வழங்கவும் அரசியல் பலமாக ஒன்று. எனவே மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற உயரிய நோக்கத்துடன் சமூக நோக்கத்தை இலக்கு வைத்தே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
இம்முறை குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஒரு சிறுபான்மையின வேட்பாளர் கூட போட்டியிட வில்லை. சிறுபான்மையின மக்கள் சார் நீங்கள் மட்டும் போட்டியிடுகின்றீர்கள் ? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
குருநகால் மாவட்ட முஸ்லிம்களுக்கு முக்கியமான தேர்தலாகவே இந்த தேர்தல் இருக்கப் போகிறது .உண்மையிலேயே குருநாகல் மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.
160 க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. இம் மாவட்டத்தில் கணிசமாளவு ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளர்களே உள்ளனர். இம்முறை இம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒருவர் கூட நிறுத்தப்பட வில்லை இது என்னுடைய வெற்றிக்கு சாதாகமான தன்மையே எடுத்துக் காட்டி நிற்கிறது. ஏனெனில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக இம்மாவட்டத்தில் வழக்கம் போல சுமார் 15000 வாக்குகள் செல்வது உண்டு.
ஆனாலும் இந்த முறை அவ்வாறு வாக்குகள் செல்வதற்கென ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வில்லை. இது எமமக்கொரு அரிய சந்தர்ப்பமாகும். இந்த தேர்தலை தவற விடும் பட்சத்தில்
இனிவரும் காலங்களில் ஒரு பராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.; ஏனென்றால் இறுதியாக நடைபெறும் விகிதாசார முறைத் தேர்தலாகவே நாங்கள் இந்த தேர்தலைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த தேர்தலில் கிடைக்கப் பெறும் பாராளுமன்றப் பிரதிநித்தவம் ஊடகத்தான் எங்களுடைய மாவட்டத்திற்கு ஒரு பராளுமன்றப் பிரதிநித்துவம் வழங்குவதற்கான வழிகள் திறக்கப்படவுள்ளது .
இல்லையெனில் நாங்கள் நஷ்டவாளிகளாகத் போக நிலை ஏற்படும். எனவே நீண்ட கால இடைவெளிக்குப் பின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இம்மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்று பட்டு இம்மாவட்டத்தின் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. இதற்காக கட்சி வேறுபாடுகளை மறந்து என்னை வெற்றி பெறச் செய்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நீங்கள் இறுதியாகக் கூற விரும்புவது என்ன?
குருநாகல் மாவட்ட முழுவதும் கல்வி பிரச்சினையினால் இந்தப் பகுதி மக்கள் பாரியளவிலான முன்னேற்றத்தை காண முடியாமல் வாழ்ந்து வருவது மிகவும் மன வேதனை தரும் விடயமாகும்.
எமது சமூகத்திலுள்ள அதிகமான இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலை மட்டும் தான் நம்பியிருக்கின்றார்கள். இந்த மட்ட நிலையிலிருந்து எமது சமூகத்தின் இளைஞர் உயர் நிலைக்கு மீட்டெடுத்து பொருளாதார ரீதியாக அவர்களை வாழ வைக்க வேண்டும்.
இந்த மாவட்டத்தில் கணிசமாளவு முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. எனினும் அவர்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் செல்வதற்கான ஒழுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. அதேபோல திட்ட அடிப்படையில் பாதை அபிவிருத்திகள் கூட மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் இன்று வரை சொல்லொண்ணாத் துன்பதுயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொண்டுக்க வேண்டியது எமது கடமையாகும்.
பாடசாலைகளில் பௌதிக வளப் பற்றாக் குறை, ஆசிரியர் பற்றாக் குறை என கல்வியில் பல தரப்பட்ட பிரச்சினைகள் யாருமே கண்டுகொள்ள முடியாதளவுக்கு மூடி மறைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவை போல பல பிரச்சினைகள் உள்ள பகுதியாக இம்மாவட்டம் விளங்குகின்றன. இந்த தேவையை இனங்கண்டு நிவர்த்தி செய்வதுடன் அதற்கான வேலைத் திட்டங்களையும் வகுத்து எமது சமூகத்தின் நிலையை உயர்த்த முன்நின்று உழைப்பதே என்னுடைய இலட்சியமாகும்.
ஆகவே இந்த மாவட்டத்தில் பல வேட்பாளர்கள் என்று கூறுவதற்கும் பொருத்தனமானவரைத் தெரிவு செய்யுங்கள் என்று சொல்வதற்கும் ஒரே ஒரு வேட்பாளர் என்ற வகையில் நான் மட்டும் தான் போட்டியிடுகின்றேன். எனவே குருநாகல் மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்றப் பிரதிநித்தவம் மிக அவசியமாகும். காலத்தின் கட்டாயத் தேவையுமாகும். இதனை மனதில் நிறுத்தி எனக்கு வாக்களிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
குருநாகல் மாவட்ட வரலாற்றில் முஸ்லிம்களிடையே புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்;பதற்கும் எதிர்வரும் காலங்களில் வரும் சவால்களை எதிர் கொள்வதற்கும் இந்த தேர்தலை குருநாகல் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நான் இறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்