எந்தவொரு அரசியல்வாதிக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நிதியுதவி வழங்கவில்லை என்று சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம்,
சர்வதேச மதிப்புப்பெற்ற தமது நிறுவனத்தை உள்ளுர் ஊடகம் ஒன்று பிழையாக கருதி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எமது நிறுவனம் தொடர்பில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அத்துடன் முதலீட்டு நாடுகளுக்கு பிழையான சமிஞ்சையை காட்டக்கூடாது.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நாட்டின் சுபிட்சத்துக்காக கடந்த 17 வருடங்களாக மிகவும் கடினமாக உழைத்தோம். இந்நிலையில் இந்நாட்டு மக்களின் மனங்களை புண்படும் வகையில் செயற்படவில்லை.
சுமார் 80நாடுகளின் செயற்படும் தமது நிறுவனம் எந்த நாட்டிலும் அரசியலில் தமது செல்வாக்கை செலுத்தியதில்லை என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீன நிறுவனம் ஒன்று 149 மில்லியன் ரூபாவை வழங்கியது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.