Breaking
Mon. Dec 23rd, 2024

அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக நேற்று முன்தினம்  25.07.2015 சனிக்கிழமை மலை சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் அலையாய் திறண்டு வந்து வரலாறு படைத்தமையானது மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது எடுத்த எடுப்பிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்வதனானது மிக இலகுவான விடயம் என்பதனை எடுத்துக்காட்டியது.

இங்கு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாத் பதியுதீன் சம்மாதுரைக்கு பொய்யான வாக்குறுதிகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது வழங்கிவிட்டு தேர்தல் முடிந்த கையுடன் கொழும்புக்குச் சென்று வாக்களித்த இப்பிரதேச மக்களை ஏமாற்றுகின்றமைக்கு இம்முறை சம்மாந்துரை மக்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைமைக்கும் சிறந்த பாடத்தினை கற்பிற்பதற்காக முடிவெடுத்துவிடார்கள் என்பதனை இங்கு அலையாய் திறண்டு வந்திருக்கும் மக்கள் வெள்ளத்தினை பார்க்கும் பொழுது புலனாகின்ரது எனத் தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் …, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான ரவூப் ஹக்கீம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கடைசி நேரத்தில் மைத்திரிபால சிறீசேனவுக்கு அதரவளிக்கும் முடிவினை எடுதற்க்கு பிற்பாடு நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும், கட்சியின் உறுபினர்களும், போராலிகளும் மைத்திரிபால சிறீசேனவுக்கு ஆதரவளிக்கின்ற முடிவினை எடுத்தபடியினாலேயே முஸ்லிம் காங்கிரசின் தலைமையான தானும் மைத்திரிபால சிறீசேனவுக்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுத்தாதாக கூறினார். இதிலிருந்து எது புலனாகின்றது என்பதனை நாம் உற்றுப் பார்ப்போமானால் துரதிஸ்ட்டவசாமாக மஹிந்தராஜபக்ஸ்ஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்திருந்தால் மைத்திரிக்கு ஆதரவளிக்கு முடிவினை எடுக்கவில்லை என்றும் முஸ்லிம்களும், கட்சியின் போரலிகளும் மைத்திரிக்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுத்ததினலேயே தானும் அந்த முடிவினை எடுக்க நேர்ந்தது என ரவூப் ஹக்கீம் நிச்சயமாக மஹிந்தவிடம் கூறியிருப்பார்.

ஆகவே தயவு செய்து என்ன்னையும் எனது குடும்பத்தினை பாதுக்காகுமாறு மஹிந்தவிடம் மன்றாடி இந்த நாட்டில் இருக்கும் 25இலட்சம் முஸ்லிம்களையும் மஹிந்தவிடம் காட்டிக் கொடுக்கும் முஸ்லிம் சமூகத்தினை பிரதிபளிக்கும் அரசியல் கட்சியின் தலைமைதுவத்திற்கு அருகதியற்ற தலைவன் என்பதை ஹக்கீம் நிரூபித்திருப்பார். மாறாக அல்லாஹ்வின் நாட்டப்படி மைத்திரிபால சிறீசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.

சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் தென்கிழக்கு பல்ல்களைக் கழக உபவேந்தர் இஸ்மாயிலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இபொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதி அமைசாரான அமீர் அலி, கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், வேட்பாளர்களான எஸ்.எஸ்.பி.மஜீட், சிராஸ் மீராசாஹிப், கட்சியின் அமைப்பாளர் ஜெமீல், கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேசத்தின் அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள் என பலர் மேடையில் வீட்டிருந்தனர்.

rr3

Related Post