Breaking
Mon. Dec 23rd, 2024
?

– இப்னு ஜமால்தீன் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று  மாலை (26) அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் அ.இ.ம.கா வின் அக்கரைப்பற்று தேர்தல் காரியாலயம் அ.இ.ம.கா தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீனினால் திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மயில் சின்னம் 08ம் இலக்கத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் போட்டியிடும் சமுக சேவகரும் நீண்ட கால அரசியல் குடும்பத்தை பின்னணியாக கொண்டவமான கணக்காளர் நபீல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் பல புதிய முகங்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்ததுடன் அக்கரைப்பற்று மக்கள் பெரும் வரவேற்பையும் வழங்கினர்.

இன்றைய நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான சகோதரர் ஹக்கீம் அ.இ.ம.கா வில் இணைந்ததுடன் வேட்பாளர் நபீலின் வெற்றிக்கு உழைக்கவுள்ளதாககவும் உறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய கூட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆற்றிய உரை

Related Post