பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.
அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முஸ்லிம்களின் புனித நூலான குரானை அவதூரப்படுத்தும் வகையில் கொம்பனிவீதி பொலிஸூக்கு அருகில் வைத்து பேசியதாக கூறப்படும் சம்பவம் மற்றும் ஜாதிக பல சேனா, கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு சம்பவங்களிலும் பிரதிவாதியாக குறிப்பிட்டு ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.(tm)