Breaking
Mon. Dec 23rd, 2024

– ரீ.கே.றஹ்மத்துல்லா –

அம்பாறை, அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் இடையில் கல்வீச்சு, கூச்சல் மற்றும் குழப்பத்தினால் பதற்றமான நிலைதோன்றியது.

அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் கூட்டம் சற்று நேரம் தடைப்பட்டு பதற்றமமானதொரு நிலை ஏற்பட்டது. பின்னர் பொலிஸார் சுமூக நிலைமைக்கு கொண்டுவந்ததன் பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், காடைத்தனத்தின் மூலம் கல்லெறிந்து, கூச்சலிட்டு கூட்டத்தை குழப்புவதனால் முஸ்லிம் காங்கிரஸின் சூழ்ச்சிமங்கள், வங்குரோத்து நிலைமைகளை மறைத்துவிடலாம் என நினைத்தால் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும். இனி இவர்களின் எந்த ஏமாற்று வித்தைகளும் ஒரு போதும் மக்களிடத்தில் பலிக்கப் போவதில்லை.

மக்களை உணர்ச்சியூட்டி, பசப்பு வார்த்தைகளைப் பேசி முஸ்லிம் காங்கிரஸ் மக்களை தவறான பாதையில் கொண்டு சென்று அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது. இன்று மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் உண்மை நிலையை உணரத்தொடங்கியுள்ளனர். இதனால் அம்பாறை மாவட்டம் பாரிய மாற்றம் கண்டு வருகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் அலை, அலையாக வந்து கொண்டிருப்பதை பொறுக்க முடியாதவர்களே வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர் என்றார்.

ad.jpg3_ ad.jpg5_ ad.jpg11.jpg4_ ad.jpg11.jpg6_ ad.jpg11.jpg444

Related Post