Breaking
Fri. Jan 10th, 2025
Abusheik Muhammed
ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திகள் :
1.- பலஸ்தீன் முஜாஹித்களுடன் இணைந்து மக்களும்
வெளிப்படுத்திய உறுதி எதிரிகளை தோற்கச் செய்துள்ளது.
2- இஸ்ரேல், 51 நாட்களாக சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட ஆயுதங்களை பாலஸ்தீன் மக்களுக்கு எதிராக செயல்படுத்தியது பாடசாலைகள், பள்ளிவாயல்கள், விளைச்சல் நிலங்கள், வீடுகள், குடியிருப்புக் கட்டிடங்கள் … போன்ற அனைத்தின் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியது. 2100 பேருக்கும் அதிகமானவர்கள் இறை பாதையில் கொல்லப்பட்டனர்.
11000 பேர் வரை காயப்பட்டனர். இவர்களுள் அதிகமானவர்கள் சிறுவர்கள், பெண்கள்,முதியோர்கள் ஆவர் ..
3.- இஸ்ரேலுக்கு பல நாடுகளும் உதவியளித்தன. எமது அரபு நாடுகள் எமக்குத் துரோகம் இழைத்தனர். எப்படித் தான் இருந்தாலும் போராட்டம் வெற்றியளித்தது. கஸ்ஸாமும் , ஸராயா குத்சும் சேர்ந்து போராடியது.
4- எமது மக்களின் உறுதி இஸ்ரேலிய படையின் அதீத கற்பனைகளை தகர்த்து எறிந்தது.
5.- இந்த வெற்றியை எங்களுக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனுக்கு நாம் சிரம் தாழ்த்துகின்றோம்
.
6- எங்கள் இறைவழி உயிர் நீத்தோரை (ஷுஹதாக்களை) நாம் இந்த இடத்தில் நினைவு படுத்துகின்றோம்.
Source- Rassd.com
Press- fairooz

Related Post