மொழிகள் பிறப்பிடம் குறித்து நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தை பரிணாம உயிரியல் விஞ்ஞானி குவென்டின் அட்கின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தோ ஐரேப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த மிக பழமையான மொழிகள், தற்போது பேசப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து ஏராளமான சொற்கள் ஆராயப்பட்டன. அதன்படி இந்தி, ஆங்கிலம், ரஷியன், ஜெர்மன், ஸ்பானிஷ், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகள் அனடோலியா பிரதேசத்தில் இருந்து உருவானது தெரியவந்தது.
பண்டைய காலத்தில் அனடோலியா என்பது இன்றைய துருக்கி ஆகும். மேற்கண்ட இந்தோ ஐரோப்பிய மொழிகளை உலகில் வாழும் 300 கோடி மக்கள் பேசுகின்றனர்.