– எம்.எப்.எம்.பஸீர் –
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார். இதனடிப்படையில், சிசிர மெண்டிஸ் இன்று 28ஆம் திகதி தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமைகளை பொறுபேற்க உள்ளார்.
சிசிர மெண்டிஸ், ஓய்வுபெறும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரி வின் பணிப்பாளராகவும் குற்றப் புலனா ய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் கடமையாற்றியமை விஷேட அம்சமாகும்.
முன்னதாக கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலப்பகுதியின் போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண கடமையாற்றினார். எனினும், ஆட்சி மாற்றத்துடன் அவரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்தே புதிய தலைவராக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.