Breaking
Fri. Nov 15th, 2024

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, பொது மக்கள் மற்றும் நட்பு நாடுகளின் போன்கள், இணைய தளங்களை உளவு பார்த்ததை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார். இதனால் அந்நாட்டிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உளவு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தேடப்படும் குற்றவாளியானார். அமெரிக்காவிடமிருந்து தப்பிக்க வேண்டி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

கடந்த 2013 முதல் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார் ஸ்னோடென். அவரை மன்னிக்கும்படி 1.5 லட்சத்திற்கு மேற்பட்டவர்களின் ஆதரவுடன் அமெரிக்க அரசிற்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த விண்ணப்பம் பற்றி ஒபாமாவின் உள்நாட்டு ஆலோசகர் லிசா மொனாகோ வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“ஸ்னோடென் அமெரிக்காவிற்கு வந்து நீதி விசாரணைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது ஓடி ஒளிந்துக்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Related Post