பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் மற்றும் சுற்றிவளைப்புக்களில் 197 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 57 வாகனங் களும் கைப்பற்றப்பட்டு வழக்குப் பொருட்களாக பதியப்பட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட 89 சுற்றிவளைப்புக்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் 170 பேரும் கிடைக்கப் பெற்ற 64 முறைப்பாடுகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில் பெரும்பாலும் சட்ட விரோத போஸ்டர்கள் தொடர்பிலான விடயங்கள் முன்னிலை வகிப்பதாகவும் சட்ட விரோத ஊர்வலங்கள் உள்ளிட்டவையும் அதில் அடங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.