-ஊடகப் பிரிவு – SLTJ-
மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை ஜும்மா தொழுகை நடத்த விடாமல் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் இன்றும் அராஜகம்.
மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் செய்து வரும் பிரச்சாரங்களுக்கு எதிராக ஜமாதே இஸ்லாமியினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த 07.02.2014 அன்று ஜமாதே இஸ்லாமி காடையர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் மர்கஸை தாக்கி, அங்கிருந்தவர்களுக்கு அடித்து, புனித குர்ஆன் பிரதிகளையும், தஃவா சாதனங்களையும் தீ வைத்து எறித்தார்கள்.
அதனைத் தொடந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரனையில் ஜமாதே இஸ்லாமியை சேர்ந்த 35 பேர்களை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவு பிரப்பித்தது.
மீண்டும் இன்று (31.07.2015) வெள்ளிக் கிழமை ஜும்மா நடைபெறவிருந்த வேலை தவ்ஹீத் ஜமாத்தின் கிளை அலுவலகம் முன்பு திரண்ட ஜமாதே இஸ்லாமி காடையர்கள், தவ்ஹீத் ஜமாத் சொந்தங்களை ஜும்மா செய்ய விடாமல் தடுத்ததுடன் அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களுக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கின்றார்கள்.
பொலிசார் முன்னிலையிலேயே இவர்கள் தங்கள் அராஜகத்தை செய்வதுடன். தவ்ஹீத் ஜாமாத் சகோதரர்கள் தாராளமாக ஜும்மா செய்யலாம் என்று நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையும் பகிரங்கமாக இவர்கள் அவமதிக்கின்றார்கள். நிலைமை இப்படியிருக்க, அராஜகம் செய்யும் காடையர்களை கைது செய்வதை விடுத்து, போலிசார் தவ்ஹீத் சகோதரர்களை கைது செய்வதற்க்கான முயற்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
ஜமாதே இஸ்லாமியின் அராஜகங்களுக்கு முடிவு கட்டும் விதமாக ஜனநாயக ரீதியிலான உரிய பதிலடியை விரைவில் ஜமாதே இஸ்லாமி தலைமையகம் பெற்றுக் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.