Breaking
Fri. Nov 15th, 2024

எம்.வை.அமீர்

இந்த பிராந்தியம் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ராப் அவர்களின் மறைவை அடுத்த பதினைந்து வருடங்களாக பாழடைந்து
இருப்பதாகவும் அந்த நிலைமை, இன்னும் படு மோசமாகிக் கொண்டு செல்வதாகவும், குறைந்தது இந்த முறை தேர்தலிலாவது மக்கள் ஒரு பாரிய அரசியல் தலைமைக்கான மாற்றத்தினை ஏற்படுத்த
வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளமனறம் செல்வார் என எதிர்பார்க்கப்படுபவரும் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் கேட்டுகொண்டார்.

இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களக்குவோம் எனும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கிவரும் தேசிய வேலைத்திட்டத்தின் தொடரில் தலைமைத்துவ பயிற்சியை பூர்த்திசெய்த இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இளைஞர் தலைமைத்துவ பயிற்சிக்கான தேசிய இணைப்பாளர் றிஸ்டி சரீப் அவர்களது தலைமையில் சாய்ந்தமருது கொம்டெக் நிறுவனத்தில் 2015-07-31ல் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜெமீல்,மாற்றத்துக்கான வாய்ப்பினை மக்கள் காங்கிரசும் அதன் தலைவர் ரிசார்ட் பதியுதீனும் தற்போது சாத்தியப் படுதியிருபதாகவும், தலைசிறந்த பத்து வேட்பாளர்கள் இப்பணியை நோக்கி பயணிப்பதாகவும், தான் இந்த பணியை சாத்தியப்படுத்த தன்னை

முழுமையாக அற்பணித்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த தன்னோடு இணையுமாறும் இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.

சத்தியம் என்றாவது ஒருநாள் வெல்லும் என்றும் உண்மையின் பக்கம் அணிதிரளுமாறும் அங்கு கூடியிருந்த மக்களை கேட்டுக்கொண்டார். நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம் உட்பட இளைஞர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

jameel.jpg2_

Related Post