Breaking
Mon. Dec 23rd, 2024

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் குடியில் திறந்திருந்த தமது அலுவலகத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விஷமிகள் தீவைத்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பாகப் போட்டியிடும் கலீலுர்றஹ்மான் என்பவரின் அலுவலகமே தீ வைக்கப்பட்டதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்தத் தீ பரவாமல் சமயோசிதமாக அணைக்கப்பட்டதாகவும் அலுவலகத்தில் இருந்த தேர்தல் விளம்பர சுவரொட்டிகள், மற்றும் பிரசுரங்கள் கட்டிடத்தின் சிறிதளவான பகுதி சேதமடைந்தததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post