Breaking
Mon. Dec 23rd, 2024

பாரம்பரியமாக இருந்த எமது காணிகளை அபகரித்து கொண்டு அதனை மக்களுக்கு கொடுக்காமல் இருந்த போது அதனை பெற்றுக்கொடுக்க முடியாத அரசியல் தலைமைகள் இந்த மாவட்டத்திலும் இருந்ததை பார்க்கின்றேன் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலையில் உள்ள கருமலையூற்று பள்ளிவாசலினை பாதுகாப்பு தரப்பு ஆக்கிரமித்து வைத்திருந்த போது அதனை கூட மீட்டுக் கொடுக்க முடியாத பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இந்த மாவட்டத்தில் இருந்ததாகவும் கூறினார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அப்துல்லா மஹ்ரூப் அவர்களை ஆதரித்து புல்மோட்டையில் இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமூகத்திற்கு பிரச்சினைகள் வருகின்ற போது அவற்றுக்காக துணிந்து பேசாத தலைமைகளை நம்பி எமது மக்கள் ஏமார்ந்த சரித்திரத்தை நாம் வரலற்றில் கானுகின்றேன்.

தமிழ் இனவாதத்தை கக்கி தமிழ் அரசியல் வாதிகளும்,முஸ்லிம் இனவாதத்தை கக்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம்,பௌத்த இனவாதத்தை கக்கி மஹிந்த ராஜபக்ஷவும் அரசியல் செய்கின்றார்கள்.அனால் அதற்கு விதி விலக்காக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பயணிக்கின்றது.

இன்னும் ஒரு யுத்தம் எமக்கு தேவையில்லை,இனவாதத்தை பேசி மீண்டும் மக்களிடத்தில் பிரச்சினையினை தோற்றுவிக்க திட்டங்களை தீட்டுகின்றவர்களை காணுகின்றோம்.வடக்கிலும்,கிழக்கிலும் உள்ள சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை எதிர்வரும் புதிய பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.இந்ந நாட்டில் யாரும் யாரையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரமும் எவருக்கும் இல்லை.

அவர்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழக் கூடிய நிலையினை நாம் தோற்றுவிக்க எம்மை தியாகம் செய்வோம்,கடந்த மாகாண சபை தேர்தலில.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்புள்ள பள்ளிவாசலை வைத்தே அரசியல் செய்தது,இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த போதும்,அந்த தம்புள்ள பள்ளிக்கான காணியினை பெற்றுக்கொடுக்கவில்லை.

.இந்த மண்ணில் இருந்து கூறுகின்றேன்,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நல்லாட்சியில் இந்த தம்புள்ள பள்ளியினை அழகான முறையில் நிர்மாணித்து கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளேன்.

புல்மோட்டை இல்மனைட் தொழிற் சாலையில் பிரதேச மக்களுக்கு நியமனங்களை நாம் கொடுத்த போது அதற்கு எதிராக போராட்டங்களை செய்தனர்.இந்த தொழில் சாலையினை கடந்த காலத்தில் நிர்வாகத்தை செய்த அமைச்சர்கள் எத்தனை பேருக்கு நியமனங்களை கொடுத்துள்ளார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 30 தேசிய பட்டியலை வழங்குவதாக கூறியுள்ளார்.ஒட்டு மொத்த தேசியப்பட்டியில் எண்ணிக்கை என்பது எத்தனை என்று மக்களுக்கு சொல்லாமல் போலியான அரசியலை நாம் செய்மாட்டோம்.பொய் சொல்லி,மக்களையும்,கட்சி போராளிகளையும் ஏமாற்றி இந்த அரசைியலை செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை,அல்லாஹ் எம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை ஒரு நாளும் மறந்து செயற்படுபடுபவர்கள் அல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

கிராண்டபாஸ் பள்ளி உடைத்த,நோளிமிட்,பெஸன் பக் போன்ற மத மற்றும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை உடைத்து எரித்து நாசமாக்கிய பொதுபலசேனா என்கின்ற நாசகார சக்தியினை பாதுகாத்த போது அவர்களுக்கு எதிராக நாம் துணிந்து பேசினோம்.எமது மக்களது மதக் கடமைகள் தடுக்கப்படுகின்ற போது அதனை பார்த்துக் கொண்டு எவருக்கும் ஆளவட்டம் வீசும் தேவை எமக்கில்லை,வில்பத்து பிரச்சினை வந்த போது சிங்கள மக்கள் மத்தியில் என்னை இனவாதியாக ,மதவாதியாக பிரபாகரனை விடவும் மோசமாக காட்டினார்கள்,அப்போது கூட நாம் சளைத்து விட வில்லை அல்லாஹ்வை தவக்கல் வைத்து நாம் துணிந்து முகம் கொடுத்தோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.

சிறந்த தைரியமுள்ள மக்களுக்காக பேசக் கூடிய நேர்மையான அரசியல் தலைமைத்துவம் இந்த மண்ணில் உருவாக வேண்டும் என்றும் கூறினார்.அதே போல் மீனவர்களது பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்,அதே கல்வி செயற்பாடுகளை துரித கதியில் முன்னெடுக்கவுள்ளேன்.

குறிப்பாக விடில்லா ஏழை குடும்பங்களுக்கான கல்வீட்டினை பெற்றுக்கொடுத்து அவர்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்துவேன் என்றும் அமைச்சர் றிசாத் கூறினார்.

Related Post