Breaking
Mon. Dec 23rd, 2024

லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வௌியிட்டிருந்த பொறுப்பற்ற அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி லிட்ரோ நிறுவனத்தினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆதாரமற்ற அறிக்கை காரணமாக லிட்ரோ நிறுவனம் மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட தனக்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் சலில முணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 22 ம் திகதி அல்லது அந்த காலப்பகுதியில் பந்துல குணவர்தன இவ்வாறானதொரு கருத்தை வௌியிட்டிருந்தார்.

அதன்படி எதிர்வரும் 7 நாட்களுக்குள் குறித்த தொகைப் பணத்தை செலுத்த தவறுமிடத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமது சட்டத்தரணியூடாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Post