மேற்குக் கரையில் வீடுகள் மீது தீமூட்டி பலஸ்தீன குழ ந்தை ஒன்று கொல்லப்பட்ட நிலையில் கடும்போக்கு யூத குழுவென்றின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பலஸ்தீன எதிர்ப்பு அமைப் பான காச் என்ற குழுவை நிறுவிய மயிர் கானே என்பவ ரின் பேரரான மயிர் எடின்ஜர் என்பவரே கைதுசெய்யப்பட்டதாக இஸ்ரேல் உளவுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மயிர் கானே 1990 ஆம் ஆண்டு நியயோர்க்கில் வைத்து கொலை செய் யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யூத கடும்போக்கு அமைப்பில் மயிர் எடின்ஜர் மேற்கொள்ளும் செயற் பாடுகளுக்காக வடக்கு இஸ்ரேலின் சபெத் நகரில் வைத்து அவர் கைது செய் யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது 20 வயதுகளில் இருக்கும் எடின்ஜர் ‘தேசியவாத குற்றச்செயல்களில்” சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டபோதும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தீவைப்பு நடவடிக்கையுடன் நேரடி தொடர்புபட்டவர் என குற்றம் சுமத்தப்படவில்லை.