Breaking
Sun. Dec 22nd, 2024

– அஹமட் இர்ஸாட் –

அஹமட் இர்ஸாட்:-நீங்கள் முகம் கொடுக்க இருக்கின்ற தற்போதைய தேர்தலுடன் கடந்தகால தேர்தல்களை ஒப்பிடுகின்ற பொழுது உங்களுக்குகான ஆதரவு கல்குடா தொகுதியில் அதிகரித்து வருக்கின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது இதற்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
அமீர் அலி:- மட்டக்களப்பில் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரைக் கூட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போரளியாக காண முடியாது. அதனால்தான் இம்மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வீழ்ச்சி ஆரம்பமாகியிருக்கின்றது. அதனோடு சேர்த்து கல்குடாவின் பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்யும் விடயத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுபங்கினை பெறுவதினாலும் இம்முறை கல்குடா பிரதி நிதித்துவத்தினை இல்லாதொழிக்கும் செயற்பாட்டினை அடிபடையாக கொண்டு அமீர் அலியை தோற்கடிக்கும் கைங்கரியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் கட்சியின் தலைமையானது கல்குடா சமூகத்திற்கு அறிமுகமில்லாத வேட்பாளரான றியாலினை களமிறக்கியுள்ளமையினை கல்குடா மக்களும் முஸ்லிம் காங்கிரசின் போரளிகளும் விளங்கிக் கொண்டுள்ளமையினால் மக்கள் சாரசாரையாக எமக்கு ஆதரவளித்து வருக்கின்றனர்.

11825668_1621952948089153_6817720181748443054_n
அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது கிழக்கு மாகாணத்திலே மிகப்பெறும் பொதுக்கூட்டம் ஒன்றினை உங்களுடைய முழுமையான நிதி ஒதுக்கீட்டில் அமைந்துள்ள அமீ அலி விளையாட்டு மைதானத்தில் வருகின்ற கிழமை ஒழுங்கு செய்துள்ளமையானது உங்களின் வாக்கு வங்கியில் சரிவினை ஏற்படுத்தாதா?
அமீர் அலி:- நான் விளையாட்டு அரங்கினை அமைத்துள்லேன் என்பதற்கான எனது சொந்த பணத்தில் அமையப்பெற்ற விளையாட்டு அரங்கு என்று கூற முடியாது. அது பொதுவாக எல்லோருக்கும் சொந்தமானது. ஜனாநாயக வழிமுறைக்கு அமைவாக அதில் எந்த கட்சியும் கூட்டங்களை நடாத்துவதற்கு உரிமை இருக்கின்றது. அந்தவகையிலே எப்படியாவது அமீர் அலியின் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பதற்காக வெளியூர்களில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ்ஸ காசுகளை கொடுத்து கூட்டங்களை சேர்ப்பதனை போன்று ரவூப்ஹக்கீமும் அமீர் அலிக்கு எதிராக கல்குடாவில் மக்கள் அலைதிறண்டுள்ளனர் என்பதனை காட்டுவதற்காக வெளியூர்களில் இருந்து மக்களை பஸ்களில் அழைத்து வர இருக்கின்றார் என்பது எமக்கு அறியக்கிடைத்துள்ளது. எவ்வாறான சதித்திட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா மக்களுக்கு இம்முறையும் செய்யக்கத்திருக்கின்றது எனபது பற்றி கல்குடா மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். சதிகாரனுக்கெல்லாம் சதிகாரன் அல்லாஹ் என்பது வருக்கின்ற 18ம் திகதி ஹக்கீம் விளங்கிக்கொள்வார்.

11811451_1621952991422482_8134342756544664133_n
அஹமட் இர்ஸாட்:- இம்முறை தேர்தலுக்குப் பிற்பாடு அமீர் அலியினதும் ஹிஸ்புல்லாவினதும் அரசியல் சூனியமாக்கப்படும் என கடந்த நோன்பு பெருநாளுக்கு முதற்தினத்தன்று ஏறாவூரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பொழுது ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அமீர் அலி:- வேலை செய்யடக்கூடிய கெட்டிக்காரர்கள், வாய்பேசக்கூடிய தைரியமிக்கவர்கள் கட்சியில் வைத்துக்கொள்ளவதற்கோ அல்லது வேறு கட்சியிகளிருந்து அப்படியானவர்கள் அரசியலினை மேற்கொள்ளு பொழுது அதற்கு முகம்கொடுப்பதற்கு ஹக்கீமுக்கு திராணி கிடையாது. ரவூப் ஹக்கீமுக்கு தலையாட்டி பொம்மைகளையும், கறுப்பினை காட்டி வெள்ளை என்று கூறும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ளும் நபர்களை வைத்துகொண்டு வைத்து அரசியல் செய்யும் தேசிய தலைமை என பீத்திக்கொள்ளும் தலைவராகவே ஹக்கீம் காணப்படுவதானது நாடறிந்த உண்மையாக இருக்கும் அதே சமயத்தில் இம்முறை முஸ்லிம் காங்கிரசின் இதயம் என வர்ணிக்கப்படும் அம்பாறையில் முதன் முதலாக போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும். அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பொழுது ஹக்கீம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை பொறுப்பினையும், கட்சியையும் எங்களிடத்தில் தறுவதே சாலச்சிறந்த விடயம் என்பதனை ஹக்கீமுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆதரவு பெருகிவருகின்றது எனக் கூறுகின்ற அதே நேரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உங்களுடைய கட்சியின் தலைமையான றிசாட் பதுர்டீன் அட்டளைச்சேனையில் கலந்து கொண்ட கூட்டத்திற்கு அங்குள்ள மக்களினால் கல்லடி கொடுக்கப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதே?
அமீர் அலி:- காய்த்த மரத்திற்குதான் கல்லடி, காய்க்காத மரத்திற்கு கல்லடி விழுவதில்லை என்பதையே எனது பதிலாக தருக்கின்ற அதேநேரத்தில் பதிலுக்கான காரணம் வருக்கின்ற 18ம் திகதி அறிந்து கொள்வீர்கள்.

11811397_1621952954755819_3076441050273658930_nஅஹமட் இர்ஸாட்:- கல்குடாவில் முஸ்லிம் காங்கிரசில் களமிறக்கப்பட்டுள்ள றியால் அவருடைய பிரச்சார மேடைகளில் உங்களை நேரடியாக தாக்கிப் பேசாமல் உங்களால் மேற்கொள்ளப்பட்ட நல்லவிடயங்களை பாராட்டுவதினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அமீர் அலி:- வேட்பாளர் றியால் தெளிவாக பேசியிருக்கின்றார் அல்ஹம்துலில்லாஹ், நான் அவரை வாழ்த்துகின்றேன். அமீர் அலி திறம்பட தனது அரசியலினை செய்கின்றார், அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார் என்ற பார்வை றியாலிடம் இருக்குமானால் ரவூப் ஹக்கீமுக்கு படிப்பினையை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும், எதிர்கால கல்குடா சமூகத்தினை கருத்தில் கொண்டும் எங்களுடன் சேர்ந்து நாங்கள் முன்னெடுக்கின்ற அரசியல் பயணத்திற்கு உரமூட்டுபவராக இருந்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகவும் எதிர்பாப்பாகவும் இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- கடந்த பொதுத்தேர்தலில் உங்களுக்கு எதிராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தேர்தலில் போட்டியிடவரும் கட்சியின் அதியுயர்பீட உறுப்பினருமான எம்.பி.எஸ்.ஹுசன், அவருடைய சகோதரர் வைத்தியர் அஜ்வாத் போன்றவர்களும் முக்கிய மூத்த போராளிகளும் உங்களுடைய அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளமையினை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
அமீர் அலி:- என்னை விடவும் எனது குறைகளை விடவும், கல்குடாவின் பிரதிநித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் தெளிகண்டுள்ளனர். ஒரு மணிதனுடைய குறை நிறைகளை பேசிக்கொள்கின்ற சந்தர்ப்பாக இதனை பார்க்காமல் இந்த மன்னினுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டே எனது நன்பரும் உயர்பீட உறுப்பினருமான ஹுசைனும்,ஆதரவாளர்களும் அதனோடு சேர்த்து அவருடை சகோதரரான பிரதேசத்தின் மூத்த வைத்தியராக இருக்கின்ற அஜ்வாத்தும் எவ்வித கோரிக்கைகளும் முன்வைக்காமல் கல்குடாவின் பிரதிநித்துவத்தினை உறுதிப்படுத்திக்கொள்ளும் பயணத்தில் எங்களுடன் கைகோர்த்துள்ளனர்.
அஹமட் இர்ஸாட்:– வேட்பாளர் றியாலினை கல்குடா மக்களுடன் கலந்தாலோசிக்கமல் முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் தனிப்பட்ட மேற்பார்வையின் கீழ் களமிறக்கியுள்ளமையினை நீங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றீர்கள்?
அமீர் அலி:- முஸ்லிம் காங்கிரசானது கல்குடா சமூகத்தினை பச்சைபச்சையாக ஏமாற்றியதன் காரணமாக இன்னும் ரவூப் ஹக்கீமை நம்பி சமூகத்தை பலிக்காடாக்க முடியாது என உணர்ந்து கொண்ட கல்குடா பிரதேச சமூகமோ இபள்ளிவாயல் நிருவாகமோ, அமைப்போ, அல்லது கழகங்களோ கடந்தகாலங்களைப் போன்று இம்முறையும் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என எவரையும் ரவூப் ஹக்கிமிடம் அழைத்துச் செல்ல வில்லை. இதன் காரணமாகவே கல்குடாவில் உள்ள முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களிடம் கலந்தாலோசிக்காமல் தனது பேச்சினை கேட்கக்கூடியவரும் கல்குடா சமூகத்திற்கு எவ்வித சம்பந்தமுமில்லாமல் கொழும்பில் வேலைபார்த்துக் கொண்டிருந்த றியாலினை ரவூப் ஹக்கீம் தன்னிச்சையாக நியமித்துள்ளார்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய வெற்றிக்கு பிற்பாடு கல்குடா மக்களிடம் இருந்து வெளிப்படுக்கின்ற முக்கிய பிரச்சனையான வாழைச்சேனை பிரதேசத்திற்கான தனியன பிரதேச சபை சம்பந்தமாக என்ன முடிவினை எடுக்க தீர்மானித்துள்ளீர்கள்?
அமீர் அலி:– இது சம்பந்தமாக ஒரே ஒரு அரசியல் கட்சிசார்பாக பேசுக்கின்ற அரசியல்வாதி நான் ஒருவனே. வாழைச்சேனைக்கு தனியான பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும் என்பதோடு பிரதேச செயலகத்திற்கு சகவசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ் உறுப்பினர்களுடன் பாராளுமன்ரத்திலும் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டே இருக்கின்றோம். ஒது சம்பந்தமாக இம்முறை நான் வெளியிட்டுள்ள இருபதுக்கு இருபது எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை முதன்மைப்படுத்தியுள்ளேன். மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களும், 10பிரதேச சபைகளும் இருக்கின்றன. மிகுதித் தேவையாக இருக்கின்ற பிரதேச சபைகள் உடனடியாக அமைய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அனைவருடனும் சுமுகமாக பேசி அதனை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளேன்.
அஹமட் இர்ஸாட்:– கல்குடா பிரதேசத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற தூய குடிநீர் பிரச்சனைக்கு எதிர்காலத்தில் நீங்கள் கொடுக்கப்போகும் தீர்வு என்ன?
அமீர் அலி:- நான் அனர்த்த சேவைகள் அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சர் அதாவுல்லாவுடன் சேர்ந்து மட்டக்களப்பிலே முதன்முதலாக குடிநீர் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தேன். அதனோடு சேர்த்து கல்குடாவுக்கான குடிநீர் பெறுவதற்கான திட்டவரைபினையும் சமர்பித்திருந்தேன். கடந்த பொத்துத்தேர்தலிலும் அதனை நிறைவேற்றி கொள்வதற்காக கல்குடா மக்களிடம் மீண்டுமொறு ஆணையை கேட்டிருந்ததினை கல்குடா மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். ரவூப் ஹக்கீமினை போன்று பாசிக்குடாவிற்கு வருக்கின்ற நீர் வினியோகத்திட்டத்தினை கல்குடாவிற்கு மாற்றியமைக்கபோவதாக கூறி அதன்பால் மக்களை ஏமாற்றும் வித்தையாக ஓட்டமாவடி பிரதான வீதியில் ஐம்பது மீற்றருக்கு பிலாஸ்டிக் குழாய்களை பதித்ததை போன்று என்னால் பூச்சாண்டி காட்டமுடியாது. பாரியளவில் திட்டமிட்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் செயற்படுத்தும் திட்டமாக இருக்கின்ற திடத்தினை எனது இருபதுக்கு இருபது அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக தனது வெற்றிக்கு பிற்பாடு முன்னெடுப்பேன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கட்சியில் இருந்த ஹுனைஸ் பாரூக்கின் வெளியேற்றத்திற்கு பிற்பாடு உங்களுடைய கட்சியின் தலைமையின் வெற்றியின் நிலைப்பாடு வன்னியில் எவ்வாறு இருக்கின்றது?
அமீர் அலி:- கட்சிக்கு வருகின்றார்கள் போகின்றார்கள் எனபது இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளிலும் இருக்கின்ற பொதுவான நிகழ்வாகும். கட்சி என்பது குர் ஆனோ, மார்க்கமோ, கிப்லாவோ கிடையாது. கட்சி என்பது என்னை பொறுத்த மட்டில் ஒரு இயக்கமாகும். வன்னியிலே ஹுனைஸ் பாரூக் சென்றுவிட்டார் என்பதற்காக எங்களது தலைமைத்துவம் ஆட்டம் கண்டுவிட்டப்போவதில்லை. கடந்த தேர்தலிலே ஹுனைசுடன் சேர்த்து இரண்டு ஆசனங்களை எமது கட்சி பெற்றுகொண்டுள்ளமையானது கட்சியின் தலைமைக்கு மக்களால் கொடுக்கப்பட்ட மரியாதையும் இவன்னிமக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு செயற்பட்டதும், தேசியத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களினதும் தமிழ் மக்களினதும் உரிமைகளுக்காக குரல் கொடுத்தமையினால் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும். ஆகவே ஹுனைஸ் பாரூக்கின் வெளியேற்றம் எங்களுடைய கட்சிக்கோ தலைமைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதனை வருக்கின்ற 18ம் திகதி நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய அரசியல் வாழ்க்கையில் கல்குடா மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற இலட்சியம் துரதிஸ்டவசமாக உங்களால் முடியாமல் போயிருக்கும். ஆனால் இம்முறை தேர்தல் வெற்றிக்கு பிற்பாடு அதனை கல்குடா மக்களுக்கு நிச்சயம் செய்து கொடுப்பேன் என எதனை இலட்சியமாக கொண்டுள்ளீர்கள்?
அமீர் அலி:- இந்த மாவட்டத்திலே கல்வி ரீதியாக என்னிடம் ஒரு தூர நோக்கு இருக்கின்றது. மாவட்டத்தில் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி தமிழர்களாக இருந்தாலும் சரி மாவட்டமானது கல்வியில் முதன்னிலையில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருபதோடு நீங்கள் கூரியதைப் போன்று இன்னும் எமக்கு கைகூடாமல் போய்யுள்ள வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுப்பதே எனது வெற்றிக்கு பிற்பாடு உள்ள இலட்ச்சியமாகும்.
அஹமட் இர்ஸாட்:- தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களுடைய பிரதேசங்களில் நீங்கள் யானைச் சின்னத்திற்கு அளிக்கின்ற வாக்குகள் அனைத்தும் அமீர் அலியினை பாராளுமன்ற கதிரையில் உட்காரச் செய்யும் என பிரச்சாரம் செய்வதாக பரவலாக பேசப்படுவதனை எவ்வாறு நினைக்கின்றீர்கள்?
அமீர் அலி:- அமீர் அலி நிச்சயமாக இம்முறை பாரளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவார் என்பது தமிழ் தேசியக் கூடமைப்பினருக்கே தெரிந்து விட்டது. அதனால் அவ்வறான பிரச்சாரத்தினை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் ஆயுதமாக தமிழ் வாக்காளர்களை முறுக்கேற்றி இனத்துவசத்தினை ஏற்படுத்தி தமிழ் முஸ்லிம் உணர்வுகளை சீர்குளைத்து அதன் மூலம் குளிர்காய்கின்ற அரசியலினை கடந்தகாலத்தில் திறம்படச் செய்துவந்தார்கள். ஆனால் இத்தேர்தல் தமிழ் மக்கள் அவர்களுக்கு தகுந்தபதிலடி கொடுப்பார்கள் என்பதனை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அஹமட் இர்ஸாட்:- அரசியலில் உங்களுடன் எப்பொழுதும் முரண்பட்டுகொள்கின்ற முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்னுடனான நேர்காணலின் பொழுது என்னையும் அமீர் அலியையும் மாவட்டத்தில் ஹக்கீமினால் தோற்கடிக்க முடியாது என்று நானும் வெல்வேன் அமீர் அலியும் வெல்வார் என உங்களுக்கு ஆதராவாக தெரிவித்துள்ள கருத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அமீர் அலி:– நிச்சயமாக ரவூப் ஹக்கீமுக்கு முன்பாகவே ஹிஸ்புல்லாஹ் அரசியலுக்குள் வந்தவர் என்றவகையில் தெளிவாக சொல்லியிருக்கின்றார்.
அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் அதன் ஆதரவாளர்களும் உங்களுக்கு மறைமுகமான முரையில் ஆதரவளித்து வருவதாக பரவலாக பிரதேசத்தில் பேசப்படுவடு சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன?
அமீர் அலி:- பசீர் சேகுதாவூத் என்னுடைய நெருங்கிய நன்பர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் தவிசாளர் என்ற ரீதிலிலும் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படிருக்க வேண்டும் என்ற விடயத்தினை நாங்கள் பேசிக்கொள்வோமே தவிர அவரும் அவருடைய ஆதரவாளர்களும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் பேசிக்கொள்வதுமில்லைஇ எங்களுக்கு அவர்கள் ஆதரவளிக்கவுமில்லை. ஆனால் ஏறாவூரினை பொறுத்தமட்டில் கனிசமான முஸ்லிம் காங்கிரஸ் போரளிகள் எங்களுடன் இணைந்து செயற்பட்டுவருக்கின்றனர். பசீர் சேகுதாவூத் இன்னும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராகவே செயற்பட்டு வருக்கின்ரார் என நினைக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கடைசியாக நீங்கள் வருக்கின்ற பாராளுஅன்ற தேர்தல் சம்பந்தமாக கல்குடாவில் உள்ள உங்களுடைய ஆதரவாளர்களுக்கு மாவட்டத்தில் இருக்கும் வாக்காளர்களுக்கும் எதனைக் கூற விருபுக்கின்றிர்கள்?
அமீர் அலி:- எதிர்காலத்தில் ஐக்கியத்தையும் அபிவிருத்தியையும் நோக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தினை தமிழ் பேசுக்கின்ற மக்கள் என்ற விடயத்தில் ஒற்றுமைபடுத்தி செயற்படுத்துகின்ற விடயத்தில் தமிழ் உறவுகளும் முஸ்லிம் உறவுகளும் எந்த பேதமும் இல்லாமல் ஒன்று சேர்ந்து மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் துவம்சம் செய்கின்ற அரசியலினை மீண்டும் கொண்டு வருவதற்கு இடமளிக்காமல் ரணில் விகரமசிங்கவின் ஆட்சியினை பலபடுத்துவதற்கு யானைச்சின்னத்திற்கு வாக்களிப்பதோடுஇ எதிர்காலத்தில் தொகுவாரி தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதனால் கல்குடா மக்கள் அதனுடனான எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இம்முறை என்னை பாராளுமன்றம் அனுப்புவதற்க்கு ஒத்துளைக்குமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

Related Post