Breaking
Sat. Nov 16th, 2024

மஹிந்த ராஜபக்ச­ ஆட்சிக்காலத்தைப் போல தானும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்­ச குடும்ப அங்கத்தவர்களை சிறையில் போட்டிருக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாம் ராஜபக்­சவைப் போன்று மக்களைத் தண்டிக்கமாட்டோம். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் போட்டிருக்கலாம். நாம் சட்டத்துக்கமையவே செயற்படுகிறோம். விசாரணை செய்ய எமக்கு பொறிமுறையயான்று தேவைப்படுகிறது. ஏனெனில், இந்த மோசடிகள் மூளையைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள இணைய தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் மேற் கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது பேஸ்புக் பக்கத்தினூடாக விவாதத்துக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளர் அல்லாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் விவாதம் நடத்த நான் தயாரில்லை. மஹிந்த பிரதமர் வேட்பாளர் அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளர் மஹிந்ததான் என ஜனாதிபதி அறிவித்தால் அவரின் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார். விவாதத்துக்கான எவ்வித அழைப்பும் எனக்கு  கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. அதனால் எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு மாற்று வழியே உள்ளது; ஒரு வேலைத்திட்டமே உள்ளது. அது ஐக்கிய தேசியக் கட்சி மட்டும் தான். அதனால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ என்ற வேலைத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 20 வருடங்கள் நாட்டை ஆட்சிசெய்த முன்னணி, இப்போது மீண்டும் வாக்குறுதியளிப்பது பொய்யானது. தோல்வியடைந்த பின்னர் மீண்டும் அந்த வாக்குறுதிகளை வழங்குவதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Post