Breaking
Sun. Dec 22nd, 2024

– ரஸீன் ரஸ்மின் –

தேசிய அரசிலாவது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா?
மாகாண சபை, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் போகிறோம். எனவே, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதுதான் ஒரு கேள்வியாகும்.

இன்;று ஒரு வித்தியாசமான அரசில் கலாசாரத்தை நோக்கி தேசிய அரசியல் நகர்ந்து செல்கிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அணியினர் மக்களை குழப்பத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சி ஒருசில சிறுபான்மைக்கட்சிகளை அரவணைத்துக் கொண்டு களமிறங்கியுள்ள அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிரிந்து ஒன்று மஹிந்த அணியென்றும், மற்றயது ஜனாதிபதி மைத்திரி அணியினர் என்று பிரிந்து தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இதற்கிடையில் சிறுபான்மைக்கட்சிகளின் நிலைப்பாடு பற்றி அதுவும் வன்னி முஸ்லிம்களின் அரசியல் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

வன்னி மாவட்டத்தை பொறுத்தவரை ஐக்கிய தேசியக்கட்சி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என முக்கியமான கட்சிகள் போட்டியிடுகின்றன.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதுதான் வன்னி தேர்தல் மாவட்டமாகும். இங்கு சுமார் 65ஆயிரம் வரை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு சுருக்கமான தகவலுடன் விடயத்திற்கு வருகிறேன்.

வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுகின்ற அதே நேரம் 10 வருடங்களுக்கும் மேலாக வன்னி மக்களின் தெரிவில் பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து வருகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறார்.
ஆத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இந்த தேர்தலில் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்.
கடந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபுல முஸ்லிம் மகக்ளை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக பல இடங்களில் வைத்து வாக்குறுதியளித்துள்ளார்.

ஆனால், இறுதிவரை வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பகல் கனவாகவே களைந்து போனது. இன்று மீள்குடியேற்றுவோம், நாளை குடியேற்றுவோம் என்று நாட்களை கடத்திக்கொண்டே இருந்தார்களே தவிர, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தவில்லை. பின்னர்தான் அது ஒரு இனவாதமாக தெரிய வந்தது.
சொந்த நாட்டிலே இடம்பெயர்ந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இன்னமும் மீளவும் குடியமர முடியாமல் 1990ஆம் ஆண்டுகளில் எங்கு சென்று இருந்தார்களோ அந்த மாவட்டங்களில் இன்னமும் மீள்குடியேற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகம் என்றால் அது வடபுல முஸ்லிம் மூகமாகத்தான் இருக்கிறது.

ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புகள், பிரகடனங்கள் என்று எத்தனை கவனயீர்ப்புக்களைச் செய்தாலும் இறுதியில் கைவிடப்பட்ட ஒரு சமூகமாகவே இந்த வடபுல முஸ்லிம் சமூகம் எல்லோராலும் பார்க்கப்பட்டது. பத்து வருடங்களுக்கும் மேலாக அரசியல் அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இருந்தும் இந்த மக்கள் முன்னைய ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு இனவாதம் என்ற தோரணையில் புறக்கணிக்கப்பட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் திறந்து விடப்பட்ட இனவாதத்தினால் வெறுப்படைந்து போன மக்கள் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தினால்தான் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் ஒன்றினைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள்.
இந்த தேசிய அரசாங்கத்தில் கூட வடக்கு முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் கௌரவமாக மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்hர்தத்pருந்த போதிலும் நூறுநாட்களில் அவ்வாறானதொரு மீள்குடியேற்றம் சாத்தியப்படாத ஒன்றாக காணப்பட்டது.எனினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி 60 மாதங்களைக் கோருகிறது.

60 மாதங்கள் எனின் 5 வருடங்களில் நல்லாட்சியை உருவாக்கியதைப் போல நாட்டை கட்டியெழுப்புவதற்கு தமக்கு ஐந்து வருடங்கள் போதும் என கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த போது இதனைக் குறிப்பிட்டார்.
எனவே, நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்திய தேசிய அரசு ஜனாதிபதித் தேர்தல் காhலங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. எனவே, 60 மாதங்களை கேட்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களில் மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

எனவே, முன்னைய ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்;களின் மீள்குடியேற்றம் ஐக்கிய தேசியக்கட்சி அராங்கத்திலாவது நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எல்லோரினதும் உள்ளத்திலும் ஒரு கேள்வியாக எழுகின்றது.

எனவே, கடந்த பத்து வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புக்கு நாம் வாக்களித்திருக்கிறோம். இதனால் எமக்கு கிடைத்தது எதுவுமில்லை. வெற்றிலைச் சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டுவது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஏல்லோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியையே எதிர்பார்க்கின்றனர்.

எனவே, எந்தக்கட்சி ஆட்சியமைக்கப் போகிறது என்பதை தேசிய அரசியலை பார்த்து புரிந்துகொள்வதற்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது என நம்புகிறேன். எனவே, வெற்றிபெறப் போகின்ற அணியினர் பக்கமே நாம் இருக்க வேண்டும். எமது பிரச்சினைகளை , மீள்குடியேற்றத்தை, அபிவிருத்தியை கௌரவமாக பெற்றுக்கொள்வதற்கு இஅரசாங்கத்துடன்தான் இணைந்திருக்க வேண்டும். அதுவும் இனவாதமற்ற அரசாங்கமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த பத்து வருடங்களாக வன்னி மகக்களுக்குரிய அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசில் செல்லப்பிள்ளையாக இருந்த போதிலும் இனவாத செயற்பாடுகளினால் தான் சார்ந்த வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை பார்ப்பதற்கு இடமளிக்கப்படவில்லை என்பதனை அமைச்சரே பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதனால் மேலே சொன்னேன். அரசுடன் இருக்க வேண்டும். அதுவும் இனவாதமற்ற அரசாங்கமாக இருக்க வேண்டும் என்று. இன்று வன்னியில் எப்படிப்பட்ட அரசியல் காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
வன்னியில் போட்டியிடும் ஒருசில வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வன்னியில் இருந்து துறத்தியடிக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் களமிறங்கியிருக்கிறார்களாம். வெற்றி, தோல்வி என்பது இணைவனின் நாட்டப்படியே நடக்கும் என நாம் நம்புகிறோம். ஆனால் வெற்றி பெறுவதாக இருந்தால் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் வன்னியில் இன்று ஒரு கூட்டத்தை தோற்கடிக்கவே தாம் முயற்சி செய்வதாக இன்னொரு கூட்டம். ஆக, மொத்தத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வாக்குகளையும் ஆளுக்கு நூறாக பிரித்துக் கொடுத்துவிட்டு இறுதியில் வேதனைப்படுவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது.
கடந்த பத்து வருடங்களாக அரசியயல் அதிகாரம் இருந்தும் வடபுல முஸ்லிம்கள் ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியிலாவது தமக்கு ஒரு பிரதிபலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.

எனவே, இந்த பொதுத் தேர்தலில் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். ஓற்றுமையாக வாக்களிப்பதன் மூலம் மட்டும்தான் எமது எதிர்பார்;ப்புககள் வெற்றியடையும் என்பதில் எதுவிதமான சந்தேகமும் கிடையாது.

எனவே, நடைபெற்ற தேர்தல்களில் வன்னி முஸ்லிம்கள் ஆளும் அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்துள்ள வரலாறுகள் இருக்கிறது. இம்முறை ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து மீண்டும் நாட்டில் நல்லாட்சியை உருவாக்க வடபுல முஸ்லிம்கள் எண்ணியிருப்பதாக தெரிகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒரு பகுதி முஸ்லிம்கள் வாக்களித்தாலும், பெரும்பான்மை முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் ஆட்சியமைக்க வேண்டும் என்பதையே விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொதுத் தேர்தலின் பின்னர் வன்னி முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடைக்கவில்லை என்றால் வாக்கு அளித்து ஏமாறும் ஒரு நிரந்தர சமூகமாக வன்னி முஸ்லிம்கள் இலங்கை வரலாற்றி இடம்பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Related Post